தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரவீன் - தாகூர் கடும் போட்டி
- நமது நிருபர் -
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பிடிக்க, மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி இடையே கடும் போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ள செல்வப்பெருந்தகையின் மகள் திருமணம், வரும் 18ம் தேதி, சென்னையில் வெகு வி மரிசையாக நடக்கவுள்ளது. அதன்பின், அவர் கட்சியின் மாநில தலைவர் பதவியிலிருந்து, விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காலியாக உள்ள திருச்சி கிழக்கு உள்ளிட்ட ஐந்து தொகுதிகளின் இடைத்தேர்தல் மற்றும் வரும் உள்ளாட்சி தேர்தலில், முதல்வர் விஜயுடன் இணக்கமாக பேசி, தகுதி அடிப்படையில் காங்கிரசுக்கு ஒதுக்கீடு பெற வேண்டும் என டில்லி மேலிடம் விரும்புகிறது.
அதற்காக காங்கிரஸ் மேலிடம் தயார் செய்துள்ள மாநில தலைவருக்கான பட்டியலில், கட்சியின் காரிய கமிட்டி உறுப்பினரும், எம்.பி.,யுமான மாணிக்கம் தாகூர், தரவு பகுப்பாய்வு மற்றும் மேலாண்மை பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதனால், அவர்கள் இருவருக்கும் இடையே, மாநில தலைவர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
பிரவின் சக்கிரவர்த்திக்கு ராஜ்ய சபா பதவிக்கு கொடுத்து நிச்சயம் ஆனபடியால் மாணிக்கம் தாகூருக்கு திருச்சி கிழக்கு தொகுதியின் நின்று போட்டியிட செய்து அவரை வெற்றி பெறவும் செய்து பிறகு அவர்க்கு
ஓர் அமைச்சர் பதவியையும் குறிப்பாக துணை முதல்வர் பதவியையும் விஜய் கொடுத்தாலும் கொடுக்கலாம் இது நடந்தே தீரும் இல்லையென்றால் இந்த பதவிக்கு திருமா வரிசையில் உள்ளார்
ஆளே வராத டீக்கடைக்கு டீ மாஸ்டர் வேலைக்கு போட்டி இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை!
மொதல்ல தொண்டர்களைச் சேருங்கள்.தமிழக காங்கிரஸ், மற்றும் தமிழக பாஜக வில் தொண்டர்கள் இல்லை.
இரண்டு பேரில் யார் தலைவர் ஆனாலும் த நாவில் காங். நிச்சயமாக தேறாது!