பெண்கள் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தவர்களுக்கு விருது

காஞ்சிபுரம்: பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு விருதுகள் வழங்கப்பட உள்ளதாக, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா வெளியிட்ட செய்திகுறிப்பு:

சமூக நலத்துறை சார்பில், பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருது, நடப்பாண்டு சுதந்திர தினத்தன்று, தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது.

விருது பெற விரும்புவோர், தமிழகத்தை பிறப்பிடமாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும், பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும்.

மேலும், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் சிறப்பாக பணிபுரிந்து, மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றி வருபவராகவும் இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனமாக இருக்க வேண்டும்.

விருது பெறுவதற்கு, ஜூன் 19க்குள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, அதற்கான கருத்துருவை காஞ்சிபுரம் கலெக்டர் வளாகத்தில் செயல்படும் சமூக நலத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement