செகுட்டையனார் கோயிலில் புரவி எடுப்பு

சிங்கம்புணரி, ஜூன் 6-

சிங்கம்புணரி அருகே நடந்த புரவியெடுப்பு திருவிழாவில் 300க்கும் மேற்பட்ட புரவிகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

மு.சூரக்குடி கிராமம் எஸ்.கோவில்பட்டி செகுட்டையனார் கோயில், சூரக்குடி சிறைமீட்ட ஐயனார் கோயிலில் புரவியெடுப்புத் திருவிழா நடந்தது. விழாவையொட்டி 20 நாட்களுக்கு முன்பு பிடிமண் கொடுக்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட குலாலர்கள் இணைந்து 2 அரண்மனைப் புரவிகளையும், 300 நேர்த்திக்கடன் புரவிகளையும் செய்தனர். புரவிப் பொட்டலில் இருந்து ஜூன் 5ம் தேதி அனைத்து புரவிகளும் கச்சேரி திடலுக்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து பாரம்பரிய முறையில் சாமியாட்டம் நடந்தது. நேற்று மாலை 5:00 மணிக்கு புரவி ஊர்வலம் நடந்தது. ஒரு அரண்மனை புரவி சிறைமீட்ட ஐயனார் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. மற்றொரு அரண்மனை புரவி நேர்த்திக்கடன் புரவிகளும் செகுட்டையனார் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. விழாவையொட்டி தங்கக் கவச அலங்காரத்தில் அய்யனார் அருள் பாலித்தார்.

Advertisement