மின்வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் இருவர் கைது; 34 சாதனங்கள் மீட்பு; 2500ரூபாய்க்கு விற்றது அம்பலம்
நமது சிறப்பு நிருபர்
தமிழக மின்சார வாரிய தலைமையகத்தில் இருந்து ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 34 ஹார்டு டிஸ்க்குகள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தமிழக மின் வாரியத்தில், 'டிரான்ஸ்பார்மர்'கள் கொள்முதலில் நடந்த, 397 கோடி ரூபாய் முறைகேடு குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிந்துள்ள நிலையில், மின் வாரிய தலைமை அலுவலகத்தில், டெண்டர் ஆவணங்கள் இடம் பெற்ற'ஹார்டு டிஸ்க்'குகள் திருடப்பட்டு உள்ளன.
கடந்த மாதம், 20ம் தேதி, இதைக் கண்டறிந்த பொறியாளர் மலர்விழி, தன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மின் வாரிய அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மே, 16 மற்றும், 17 ஆகிய வார இறுதி நாட்களில், குறைந்த அளவு ஊழியர்கள் பணியில் இருந்த போது, ஹார்டு டிஸ்க் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இந்தத் திருட்டுகள் மே மாதம், இது இரண்டு நாட்களுக்கு முன்புதான் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள வளர்புரத்தைச் சேர்ந்த 31 வயதான கோபிநாத் மற்றும் முரளி மனோகர் என அடையாளம் காணப்பட்டனர்.
தமிழக மின்சார வாரியத் தலைமையகத்திலிருந்து ஹார்டு டிஸ்க்குகளை திருடிய இடைத்தரகராக கோபிநாத்தையும், அவற்றை வாங்கிய பெறுநராக முரளி மனோகரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது: கோபிநாத் மே 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்திலிருந்து 34 ஹார்டு டிஸ்க்குகளைத் திருடியுள்ளார்.
பின்னர், அவர் அந்த சாதனங்களைத் தனது இல்லத்தில் வைத்து, அவற்றை பார்மட் செய்து, தரவுகளை அழித்த பிறகு பெங்களூருக்குக் கொண்டு சென்றுள்ளார். தலா ரூ.20,000 மதிப்புள்ள ஹார்டு டிஸ்க்குகள், ஒவ்வொன்றும் ரூ.2,500க்கு விற்கப்பட்டன. தற்போது 34 ஹார்டு டிஸ்க்குகள் மீட்கப்பட்டுள்ளது. மின்சார வாரியம் தொடர்பான கொள்முதல் மற்றும் ஒப்பந்தப்புள்ளி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களின் தொடர்பு குறித்தும் விசாரணை நடக்கிறது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இந்த விசாரணை தமிழகத்தைத் தாண்டி விரிவடைந்துள்ளதாலும், இதில் பல்வேறு இடங்களைச் சேர்ந்த சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாலும், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவது குறித்து போலீசார் பரிசீலித்து வருகின்றனர். இதற்கிடையில், கோபிநாத் எழும்பூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். முரளி மனோகரும் காவலில் எடுக்கப்பட்டார். விசாரணை நடைபெற்று வருகிறது.
முரணான தகவல்கள். சிபிஐ விசாரணை தேவை. மாநில போலீசிடம் சிபிஐ போல் அதிக தொழில் நுட்ப வசதிகள் இருக்காது. டேட்டா கம்ப்யூட்டர், சர்வர் போன்ற பல இடங்களில் சேமிக்க படும். ஹார்ட் டிஸ்க் format - செய்தாலும் பாழ் பட்டாலும் பதிவான தகவல்களை எடுக்க முடியும். மேலும் டெண்டர் மதிப்பீடு காகித நகல் பராமரிக்க வேண்டும். இதில் மிக பெரிய அளவில் ஊழல் நடந்து இருக்கும். சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு ரைட் ஒரு நாடகம். திமுகவை காப்பாற்ற வேண்டிய நிலையில் வெட்டி கழகம். விஜய் மதிப்பு விரைவில் குறையும். அறுதி பெரும்பான்மை இல்லாமல் அறிவாலயம் அவ்வளவு எளிதாக ஆட்சி செய்ய விடாது. கவர்னர் ஆட்சி தான் சிறந்த வழி.
மழை விட்டும் தூவானம் விடவில்லை. விஜய்க்கு தெரியாமல் ஒரு பவர் சென்டர் ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது. ஆட்சியை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்து எல்லா தீக்களையும் கைது செய்து அந்தமான் சிறையில் தள்ள வேண்டும். தமிழக மக்கள் ஐயோ பாவம்
save to balaji plan
ஆடு திருடு போனதாய் சொன்ன கோவாலு கடைசியா என்ன சொன்னான். நினைத்து பாருங்கள். என்ன பித்தலாட்ட பேச்சுக்கள். எடைக்கு போட்டிருந்தால் கூட 5000 ரூபாய் கிடைத்திருக்கும். இந்த திருடர்கள் மற்ற அரசோ தனியார் நிறுவனங்களில்யோ ஏன் இந்த டிஸ்க் திருட்டை நடத்தவில்லை. த வே க வின் திருட்டு செயல்கள் விஞ்ஞானத்திற்கும் புலப்பாடாத அறிய வகை புரட்டாக இருக்கிறது. ஆயிரம் சர்க்காரியா வந்தாலும் ஒரு ஆணியையும் புடுங்கமுடியாமல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு போய்விடுவார்கள்.
இதில் கண்டிப்பாக பத்துரூபாய் ...க்கு சம்பந்தம் இருக்கும்.
Why the thieves chose to steal the hard disks from TNEB? Were they aware that they contained sensitive information? Why they erased the contents immediately? Why they went to other state Bangalore to sell them instead of Chennai itself? Lot of suspicions arise.
2500 ரூபாய் நல்ல காமெடி,,
வரும் செய்திகளை எல்லாம் வைத்து பார்க்கும்பொழுது...எதுவும் நம்பும்படியாக இல்லை.. இது எதோ வெறும் 2500 ரூபாய்க்கு செய்த திருட்டாக எடுத்துக்கொள்ளமுடியாது.
இதன் பின்னணி மிகவும் பெரிய விஷயமாகத்தான் இருக்கவேண்டும்.... சுப்ரீம் கோர்ட் நேரடியாக இறங்கி, எல்லா துறைகளிலும் ஆய்வு நடத்தி உண்மை நிலவரத்தை மக்கள் அறிய செய்யவேண்டும்..
ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்க மக்கள் வேண்டும்.. ஆனால் அந்த மக்களுக்கு உள்ளே நடக்கும் எந்த ஒரு திருட்டும், கொள்ளையும், ஊழலும் பற்றிய எந்த விவரமும் தெரிந்து விடக்கூடாது என்றுதான் மொத்த இந்தியாவிலும் நடக்கிறது.. மக்கள் ஆட்சியில் வெளிப்படைத்தன்மை தமிழ்நாட்டில் மட்டும் இல்லை... இந்திய அளவில்கூட கொஞ்சம் கூட இல்லை.
நம் நாடு ஊழலினாலேயே அழிந்து வருகிறது..ஊழலினாலேயே வறுமை இன்னமும் தீர்ந்தபாடில்லை.. ஊழலினாலேயே எவ்வளவு படித்தும் வேலைவாய்ப்பு இல்லாமல் மக்கள் கஷ்டத்தில் இருக்கிறார்கள்.
இதை பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லாமல் மக்கள் இன்னமும் திராவிஷங்களுக்கும், கட்டவுட் நாயகர்களுக்கும் ஓட்டுப்போட்டுக்கொண்டு கடைசி வரை பிச்சைக்காரர்களாகவே இருக்கிறார்கள்...
Cbi enquiry should be immediately initiated
Perfectly correct.
கரூர் சிபிஐ விசாரணை ஓய்வு பெற்ற சுப்ரிம் கோர்ட் நீதிபதியின் கண்காணிப்பில் நடந்தது
ரிப்போர்ட் வெளியாகவில்லை
ஹார்ட் டிஸ்க் திருட்டு... வெறும் 2000 ரூபாய்க்காக நடந்து இருக்க வாய்பில்லை.... திருட்டு நடந்த நாட்களுக்கு முன்னால்.... அவர்கள் யாருடன் எல்லாம் பேசினார்கள்....
அவர்களது கைப்பேசி தரவுகளை சோதனை செய்ய வேண்டும்.... கண்டிப்பாக இதில் பெரிய சதி நடந்து இருக்க வாய்புள்ளது.... நடந்த ஊழலை....ஆதாரங்களை..... மறைக்க தான்..... இந்த திருட்டு நாடகம் போல் தெரிகிறது.
எதுவுமே நம்பும்படியாக இல்லை. உண்மையை திமுகவினர் மறைத்து விட்டனர்