தவறுகளை சுட்டி காட்டினால் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

4

கோவை: ''தவறுகளை சுட்டி காட் டினால், நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்,'' என, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி:
தென்மேற்கு பருவமழையால் தமிழகத்துக்கு பாதிப்பு அதிகம் இல்லை; அச்சுறுத்தலும் இல்லை. கன்னியாகுமரி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்தாண்டுக்கு ஒவ்வொரு துறையிலும் எப்படி செயல்பட வேண் டும், மக்கள் எதிர்பார்ப்பு என்ன... செய்ய வேண்டிய பணிகள் குறித்து நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கேள்விகள் கேட்பதை விட்டுவிட்டு, தவறுகள் நடப்பதை மீடியாக்கள் சுட்டிக் காட்டினால் உரிய நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும். தமிழக சட்டம் ஒழுங்கு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. காவிரி நீரை பொருத்தவரை மேகதாது அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என முதல்வர், பிரதமரை வலியுறுத்தியுள்ளார். எங்கள் கூட்டணியில் திறந்த மனதோடு இருக்கிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement