பாசி படர்ந்த குளத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை
அச்சிறுபாக்கம்:ஆணைக்குன்னம் குளத்தில் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசுவதால், அதை துார்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆணைக்குன்னம் ஊராட்சி உள்ளது. இங்கு, 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆதிதிராவிடர் பகுதியில் இலுப்பந்தோப்பு அருகே குளம் உள்ளது.
இந்த குளத்தை சில ஆண்டுகளுக்கு முன், கிராம மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த குளம் முழுதும் பாசி படர்ந்து, குப்பை கழிவுகள் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், அப்பகுதி மக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பராமரிப்பின்றி உள்ள குளத்தை சீரமைக்க ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் குளத்தை துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கசிவு; விண்வெளி வீரர்களுக்கான எச்சரிக்கையை வாபஸ் பெற்றது நாசா
-
மின்வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கில் இருவர் கைது; 34 சாதனங்கள் மீட்பு; 2500ரூபாய்க்கு விற்றது அம்பலம்
-
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரவீன் - தாகூர் கடும் போட்டி
-
புதிய இயக்கம் தொடங்கினார் நடிகர் ரஜினி மனைவி லதா
-
ரயில்கள் மீது கல், பாட்டில் வீச்சு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
-
தமிழக மக்களுக்கு புரியும் மொழியில் தேசிய கட்சிகள் பேசவில்லை!