சமுதாய நலக்கூடத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

சித்தாமூர்:பொலம்பாக்கம் கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சித்தாமூர் அருகே பொலம்பாக்கம் கிராமத்தில் வந்தவாசி செல்லும் சாலையில் சமுதாய நலக்கூடம் உள்ளது.

இவை 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.

சித்தாமூர், பொலம்பாக்கம், சரவம்பாக்கம், பேரம்பாக்கம், முகுந்தகிரி, மழுவங்கரனை உள்ளிட்ட கிராம மக்கள், தங்களது குடும்பங்களின் நிச்சயதார்த்தம், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.

தற்போது, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி, சமுதாய நலக்கூடம் திறக்கப்படாமல் உள்ளது.

போதிய பராமரிப்பு இன்றி சேதமடைந்து வருவதால், பெரும்பாலான மக்கள் அங்கு சுப நிகழ்ச்சிகளை நடத்த தயக்கம் காட்டுகின்றனர்.

எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து சமுதாய நலக்கூடத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அப் பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement