ரூ. 8 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு

காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள மானகிரி ஆரோக்கிய மாதா தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கிய லெவே 42. இவரிடம் ரியல் எஸ்டேட் தொழில் ஆசையைக் காட்டி 2021ல் காரைக்குடி சூடாமணிபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் அவரது மனைவி சுபா ரூ.10 லட்சம் பெற்றுள்ளனர்.

ஆனால் எந்த தொழிலிலும் கூட்டு சேர்க்கவில்லை. தான் கொடுத்த பணத்தை ஆரோக்கியலெவே கேட்டுள்ளார். அதில் இரு தவணையாக ரூ.2 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளனர். மீதமுள்ள ரூ. 8 லட்சத்தை கேட்ட போது பணத்தை திருப்பி கொடுக்காமல் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, ஆரோக்கியலெவே காரைக்குடி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவின் படி விஜயகுமார், மனைவி சுபா மீது காரைக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement