கணவர் கொலை: காதலன் கைது
சூலூர்: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 42; கூலித் தொழிலாளி; மனைவி பாண்டீஸ்வரி. அரசூர் அடுத்த சங்கோதிபாளையத்தில் வசித்தபோது அருகே வசித்த மாரிமுத்து என்பவருடன் பாண்டீஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜ்குமார் 2 ஆண்டுகளுக்கு முன் மனைவியைப் பிரிந்து, விருதுநகர் சென்றுவிட்டார். மாரிமுத்துவும் பாண்டீஸ்வரியை ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அவரது தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டார்.
பாண்டீஸ்வரி, கணவருடன் சேர்ந்து வாழ மறுத்துள்ளார். ராஜ்குமார் தனது தம்பி ரவிக்குமார், மாமா பீட்டர் தன்ராஜ் ஆகியோருடன், மாரிமுத்து வசிக்கும் கருமத்தம்பட்டி அடுத்த கொள்ளுப்பாளையத்துக்கு வந்துள்ளார். அங்கு மாரிமுத்துவை தாக்கியுள்ளார். அப்போது மாரிமுத்து கத்தியால் குத்தியதில் ராஜ்குமார் உயிரிழந்தார். கருமத்தம்பட்டி போலீசார் மாரிமுத்துவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
ராகுல், சுப்மன் கில் கலக்கல் சதம்: முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்
-
மாணவர்களுக்கு பாராட்டு
-
விளம்பர செய்தி --- அப்போலோ இரைப்பை குடலியல் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆலோசனை
-
ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் பணிக்கொடை கோரி முதல்வரிடம் மனு
-
அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
-
நம்ம பள்ளி... நம்ம வாத்தியார்: 200 பேப்பர் ஆர்டர் ---------------------------------- சிதம்பரத்தில் 75 ஆண்டுகளை கடந்து கல்வி சேவை ஆற்றும் அரசு உதவி பெறும் பள்ளி