லாரி மீது பஸ் மோதி விபத்து ஆம்னி பஸ் டிரைவர் பலி
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில், லாரியின் பின்னால் தனியார் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் பஸ் டிரைவர் உயிரிழந்தார்.
சென்னை, அசோக் நகர், ஜாபர்கான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் 46; தனியார் ஆம்னி பஸ் டிரைவர். இவர், பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ்சை ஒட்டி சென்றார்.
நேற்று அதிகாலை 4:00 மணியளவில் உளுந்துார்பேட்டையில், விருத்தாசலம் செல்லும் சாலை மேம்பாலம் அருகே சென்ற போது, கோலமாவு ஏற்றிக் கொண்டு சேலத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற லாரியின் பின்னால் தனியார் ஆம்னி பஸ் மோதியது. இதனால் லாரி சாலையின் நடுவே உள்ளே சென்டர் மீடியனை தாண்டி நின்றது.
இந்த விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர் சுந்தரேசன் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். பஸ் பயணிகளுக்கு காயம் ஏதும் இல்லாமல் தப்பினர்.
உளுந்துார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, டிரைவர் சுந்தரேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும்
-
ராகுல், சுப்மன் கில் கலக்கல் சதம்: முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்
-
மாணவர்களுக்கு பாராட்டு
-
விளம்பர செய்தி --- அப்போலோ இரைப்பை குடலியல் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆலோசனை
-
ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் பணிக்கொடை கோரி முதல்வரிடம் மனு
-
அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
-
நம்ம பள்ளி... நம்ம வாத்தியார்: 200 பேப்பர் ஆர்டர் ---------------------------------- சிதம்பரத்தில் 75 ஆண்டுகளை கடந்து கல்வி சேவை ஆற்றும் அரசு உதவி பெறும் பள்ளி