ஏ.டி.எம்.,மில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த அலுவலர்
பெரியகுளம்:பெரியகுளம் ஏ.டி.எம்.,மில் ரூ.5 ஆயிரத்தை எடுக்காமல் சென்ற நாகலட்சுமியின் பணத்தை தேனி எஸ்.பி., அலுவலக அலுவலர் சந்தனக்குமார் 48, எடுத்து அதனை உரியவரிடம் வீடு தேடி சென்று கொடுத்தார்.
பெரியகுளம் அருகே மேல்மங்கலம் கல்லுக்கட்டு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்தனக்குமார் 48. இவர் தேனி எஸ்.பி., அலுவலகத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். (ஜூன் 5 )பெரியகுளம் மூன்றாந்தல் எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., மில் பணம் எடுக்க சென்றார். கார்டை செலுத்துவதற்குள் 10 எண்ணிக்கையில் ரூ.500 நோட்டு ரூ.5 ஆயிரம் சந்தனக்குமார் கையில் வந்தது. தனக்கு தேவையான பணத்தை ஏ.டி.எம்.மில்., எடுத்துக் கொண்டு, தவறுதலாக கிடைத்த ரூ.5 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைப்பதற்கு சந்தனக்குமார் வங்கியை தொடர்பு கொண்டு விபரம் கேட்டறிந்தார்.
குறிப்பிட்ட நேரத்தில் வந்து சென்று ஏ.டி.எம்., மில் கார்டை செலுத்தி, வெகு நேரமாக காத்திருந்து பணம் வரவில்லை என நினைத்து வீடு திரும்பியவர் மேல்மங்கலத்தைச் சேர்ந்த நாகலட்சுமி என தெரிய வந்தது. அவரிடம் ரூ.5 ஆயிரத்தை சந்தனக்குமார் வீடுதேடி சென்று ஒப்படைத்தார். சந்தனக்குமாரை சக பணியாளர்கள் பாராட்டினர்.
--
மேலும்
-
ராகுல், சுப்மன் கில் கலக்கல் சதம்: முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்
-
மாணவர்களுக்கு பாராட்டு
-
விளம்பர செய்தி --- அப்போலோ இரைப்பை குடலியல் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஆலோசனை
-
ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் பணிக்கொடை கோரி முதல்வரிடம் மனு
-
அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
-
நம்ம பள்ளி... நம்ம வாத்தியார்: 200 பேப்பர் ஆர்டர் ---------------------------------- சிதம்பரத்தில் 75 ஆண்டுகளை கடந்து கல்வி சேவை ஆற்றும் அரசு உதவி பெறும் பள்ளி