கலெக்டர், கமிஷனருக்கு ஆணையம் 'நோட்டீஸ்'

திருப்பூர்: திருப்பூர் பஸ் ஸ்டாண்ட் கழிப்ப றையில், உரிய உபகரணங்கள் இன்றி துாய்மை பணியாளர் பணியா ற்றிய விவகாரத்தில், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் அறிக்கை அளிக்க, மாநில ஆதிதிராவிடர் ஆணையம் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்று ம் பழங்குடியினர் மாநில ஆணைய உறுப்பினர்கள் செல்வகுமார், பொன்தோஸ் ஆகியோர் அனுப்பிய நோட்டீசில், 'திருப்பூர் மாநகராட்சி பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள இலவச கழிப்பறையில், துாய்மை பணியாளர் சந்திரன், கையுறை உள்ளிட்ட உபகரணம் இன்றி, மனித கழிவுகளை அகற்றியதாக, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

'மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது.

'ஆணையம் தாமாக மு ன்வந்து, விசாரணைக்கு எடுத்து, திருப்பூர் கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ஜூன், 19ம் தேதிக்குள் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளது.

Advertisement