2 நாட்களில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,240 குறைவு

2

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1840 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 230 ரூபாய் குறைந்து 14,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் நேற்று முன்தினம் ஆபரண தங்கம், கிராம், 14,480 ரூபாய்க்கும், சவரன், 1,15,840 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 285 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (ஜூன் 06) தங்கம் விலை கிராமுக்கு, 50 ரூபாய் குறைந்து, 14,430 ரூபாய்க்கு விற்பனையானது.

சவரனுக்கு, 400 ரூபாய் சரிவடைந்து, 1,15,440 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, ஐந்து ரூபாய் குறைந்து, 280 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 5,000 ரூபாய் சரிவடைந்து, 2.80 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஜூன் 06) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1840 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 230 ரூபாய் குறைந்து 14,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2240 ரூபாய் சரிந்துள்ளது.

வெள்ளி நிலவரம்




வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 270 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Advertisement