விருத்தாசலம் நகராட்சியில் மரக்கன்று நடல்

விருத்தாசலம்: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, விருத்தாசலம் நகராட்சி புதுக்குப்பம் மலையடி சாலையில், நகர்புற பசுமையாக்கல் மற்றும் மரம் நடும் திட்டத்தின் கீழ், உலக வெப்பமயமாதலை தடுக்கவும், சுற்றுப்புற சூழலை பாதுகாக்கவும் நகராட்சி பகுதிகளில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நகராட்சி நிர்வாக மண்ட ல இயக்குனர் லட்சுமி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், நகராட்சி கமிஷனர் நாகராஜ், துப்புரவு அலுவலர் (பொறுப்பு) சிவராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

இதில் துப்புரவு மேற்பார்வையாளர்கள், துாய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், நகராட்சி ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த திட்டத்தின் கீழ், விருத்தாசலம் நகராட்சியில் உள்ள முக்கிய பகுதிகளில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. முதல் கட்டமாக நேற்று நுாறு மரக்கன்றுகள் நடப்பட்டது.

Advertisement