உண்டு உறைவிட பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு
கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் ரூ.2.50 கோடி மதிப்பில் புதிய ஆய்வு மாளிகை கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கல்வராயன்மலையில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.2.50 கோடி மதிப்பில் புதிய ஆய்வு மாளிகை கட்டடம் கட்டப்படுகிறது.
இதில் தரைதளம் மற்றும் முதல் தளங்களில் நுழைவு அறை, வரவேற்பு அறை, மூன்று தங்கும் அறைகள், உணவு அருந்தும் அறை, பொருட்கள் வைப்பு அறை, முக்கிய பிரமுகர்கள் தங்கும் அறை, கூட்டரங்கு என, நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது.
கட்டுமான பணிகளை கலெக்டர் பத்மஜா நேற்று ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும், விரைவாகம் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாலா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையடுத்து வெள்ளிமலை அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன், கல்வியின் முக்கியத்துவம், மாணவர்களின் தொடர் வருகைப் பதிவேடு குறித்து ஆய்வு செய்தார்.
பின், மாணவ, மாணவிகளிடம் எதிர்கால கனவுகள் குறித்து கலந்துரையாடி கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், அரசின் திட்டங்களை முறையாக பயன்படுத்துவது குறித்தும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
கல்வராயன்மலையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.
மேலும்
-
தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் அமைச்சர் ராஜிவ் உறுதி
-
கணவர் கொலை காதலன் கைது
-
லாரி மீது பஸ் மோதி விபத்து ஆம்னி பஸ் டிரைவர் பலி
-
பா.ஜ., மாநில துணைத் தலைவர் அண்ணாமலை இயக்கத்தில் ஐக்கியம்
-
ஏ.டி.எம்.,மில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த அலுவலர்
-
கிராமங்களில் வளர்ச்சி பணிகள் முடக்கம்உள்ளாட்சி தேர்தல் நடத்த வலியுறுத்தல்