விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி 

ரிஷிவந்தியம்: பழைய சிறுவங்கூர் கிராமத்தில் அட்மா திட்டம் மூலம் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி நடந்தது.

வாணாபுரம் அடுத்த பழையசிறுவங்கூர் கிராமத்தில் நடந்த பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் சியாம்சுந்தர் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் அய்யாதுரை, கோமுகி உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் திலகம், நெட்டாபிம் நிறுவன ஊழியர் சிவசங்கர், உதவி வேளாண்மை அலுவலர்கள் வேலு, விஜோத்குமார் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

இதில், மண் வளம் பாதுகாப்பு, உழவு முறைகள், நெல், மக்காச்சோளம், உளுந்து, மணிலா, கரும்பு மற்றும் மரவள்ளி பயிர்களில் ஏற்படுகள் நோய்கள், பூச்சி மேலாண்மை, தொழில்நுட்ப பயிற்சிகள், உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கும் வழிமுறை, விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்தல், சொட்டு நீர் பசானத்தின் முக்கியத்தும் மற்றும் பராமரிப்பு பணிகள், இயற்கை விவசாயத்தின் பயன்கள், வேளாண்மை துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சாட்டர்ஜி, உதவி தொழில்நுட்ப மேலாளர் மேரி ஆனந்தி செய்தனர். துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Advertisement