செல்லப்பிராணிகளுக்கு நோய் தடுப்பூசி முகாம்

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செல்லபிராணிகள் மற்றும் தெரு நாய்களுக்கான நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.

கோட்டக்குப்பம் நகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நடந்த முகாமை நகராட்சி கமிஷனர் துர்கா துவக்கி வைத்தார். முகாமில்  கோட்டக்குப்பம் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் வளர்க்க கூடிய பூனை, நாய் உள்ளிட்ட செல்லபிராணிகளுக்கும், வீதிகளில் திரியும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட்டபட்டது.

விழுப்புரம் மாவட்ட விலங்குகள் நல அலுவலர் டாக்டர் செல்வமுத்து முன்னிலை வகித்தார். முகாமில் பொம்மையார்பாளையம் கால்நடை டாக்டர் தங்கமுத்து, கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினார்.

முகாமில், செல்லப்பிராணிகளுக்கு ரேபிஸ் எவ்வாறு பரவுகிறது, அதனைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து கையேடு வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை கோட்டக்குப்பம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணவேல் செய்திருந்தார்.  

Advertisement