விஷம் குடித்த மூதாட்டி பலி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே களைக்கொல்லி மருந்து குடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள்,75; இவர், கடந்த பல வருடங்களாக உடல்நல பிரச்னையால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார். இதனால் மனவருத்தத்தில் இருந்த செல்லம்மாள் கடந்த 5ம் தேதி களைக்கொல்லி மருந்து குடித்தார். இது குறித்து தகவலறிந்த அவரது குடும்பத்தினர் செல்லம்மாளை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்லம்மாள் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement