தருமபுரம் ஆதீனம் நாளை பட்டினப்பிரவேசம்
தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப்பிரவேச விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது.
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா கடந்த 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ஆம் நாள் விழாவான இன்று ஆதீனத்தை தோற்றுவித்த குருஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை திருநாள் கொண்டாடப்படுகிறது.
ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் சுமந்து செல்ல, மூன்று யானைகள், குதிரை ஆகிய மங்கல சின்னங்கள் முன் செல்ல, ஆதீனத் திருக்கூட்டத்து அடியவர்களுடன் ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினார்.
தொடர்ந்து வனதுர்க்கை அம்மன் ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார். ஆதின கட்டளை தம்பிரான்கள், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். பெருவிழாவின் சிகர நிகழ்வாக 11ஆம் நாளான நாளை ஞாயிறு தருமபுரம் ஆதீனகர்த்தரை பக்தர்கள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளச் செய்து சுமந்து வீதிகளை சுற்றி வலம் வரும் பட்டினப்பிரவேசம் நிகழ்வு இரவு 9 மணிக்கு நடக்கிறது. மறுநாள் அதிகாலையில் ஞானகொலு காட்சியும் நடைபெற உள்ளது.
மேலும்
-
தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் அமைச்சர் ராஜிவ் உறுதி
-
கணவர் கொலை காதலன் கைது
-
லாரி மீது பஸ் மோதி விபத்து ஆம்னி பஸ் டிரைவர் பலி
-
பா.ஜ., மாநில துணைத் தலைவர் அண்ணாமலை இயக்கத்தில் ஐக்கியம்
-
ஏ.டி.எம்.,மில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த அலுவலர்
-
கிராமங்களில் வளர்ச்சி பணிகள் முடக்கம்உள்ளாட்சி தேர்தல் நடத்த வலியுறுத்தல்