பொய்யான கதைகளை பரப்பும் இடமா இது; ஐ.நா.,வில் பாகிஸ்தானை விளாசிய இந்தியா
நியூயார்க்: 'ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே நீடிக்கிறது' என ஐநாவில் பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் சபை கூடியது. இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பார்வதனேனி ஹரிஷ், ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் தூதர் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுத்தார்.
அவர் பேசியதாவது: முற்றிலும் இந்தியாவிற்கு மட்டுமே சொந்தமான ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பான ஒரு விஷயத்தை பாகிஸ்தான் தேவையற்ற முறையில் குறிப்பிட்டிருப்பது, பதிலளிக்க என்னை நிர்பந்தித்திருக்கிறது.
தவறான சித்தரிப்புகளைப் பரப்புவதற்காக, பாகிஸ்தான் சர்வதேச மன்றங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருகிறது. இந்தியா தொடர்பான பிரச்னைகள் குறித்துத் தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம், ஐ.நா. பாதுகாப்பு சபையின் உறுப்பினர் என்ற தனது பதவியை பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்துகிறது. ஒருதலைபட்சமான மற்றும் பொய்யான கதைகளைப் பரப்புவதற்குப் பயன்படுத்தப்படக்கூடாது.
ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருக்கிறது, எப்போதும் அப்படியே இருக்கும். இதற்கு மாறாகக் கூறப்படும் எந்தவொரு கூற்றும் வரலாற்று உண்மைகளுக்கு முரணானது. அவை கள யதார்த்தத்தை மாற்றாது. இவ்வாறு பார்வதனேனி ஹரிஷ் கடுமையாக சாடினார்.
ஐ. நா அப்பிடியே உண்மை விளம்பிகளின் இருப்பிடம்.
இனி ஒருமுறை ஐ நா சபையில் பாக்கிஸ்தான் பேசினால் பாக்கிஸ்தான் மீது ஏவுகணைகளை போடுவோம் என்று சொல்ல வேண்டியது தானே.மேலும்
-
தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் அமைச்சர் ராஜிவ் உறுதி
-
கணவர் கொலை காதலன் கைது
-
லாரி மீது பஸ் மோதி விபத்து ஆம்னி பஸ் டிரைவர் பலி
-
பா.ஜ., மாநில துணைத் தலைவர் அண்ணாமலை இயக்கத்தில் ஐக்கியம்
-
ஏ.டி.எம்.,மில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த அலுவலர்
-
கிராமங்களில் வளர்ச்சி பணிகள் முடக்கம்உள்ளாட்சி தேர்தல் நடத்த வலியுறுத்தல்