ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில் தான்: சொல்கிறார் ஸ்டாலின்
சென்னை: ''இப்போது ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில் தான்,'' என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கஜேந்திரன், அவரது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். இணையும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது: எப்பொழுதும் ஒரு இயக்கத்தில் இருந்து இன்னொரு இயக்கத்திற்கு பிரிந்து போகிறார்கள் என்று சொன்னால் ஏதோ ஒரு லாபத்தை அடிப்படையாக வைத்து, ஏதாவது வசதியை மனதில் கொண்டு ஆளுங்கட்சியை நோக்கி தான் போவது உண்டு.
இன்றைக்கு திமுக ஆளுங்கட்சியாக இருந்து எதிர்க்கட்சியாக மாறி இருக்கிறது. எதிர்க்கட்சியை நோக்கி வந்து இருக்கிறீர்கள் என்று சொன்னால் பதவிக்காக நீங்கள் வரவில்லை. சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காக வரவில்லை, பணியாற்ற வேண்டும் இந்த இயக்கத்திற்கு துணை நிற்க வேண்டும்.
வெற்றி, தோல்வி
தமிழ் சமுதாயத்திற்கு பாடுபட வேண்டும், இழந்து இருக்கும் ஜனநாயகத்தை மீட்க வேண்டும் என்ற உணர்வோடு வந்து இருக்கிறீர்கள். திமுகவை பொறுத்தவரை வெற்றி, தோல்வி என்பது மாறி மாறி வரும். அதற்காக வெற்றியை கண்டு என்றைக்கு வெறி கொண்டு அலைந்து இருப்பது இல்லை.
தோல்வியை கண்டு என்றைக்கும் துண்டு விடமால் பணியாற்ற கூடியவர்கள் திமுகவினர் என்பதை நிரூபித்துக்கொண்டு இருக்கிறோம். வெற்றி வாய்ப்பை நாம் இழந்து இருந்தாலும் ஆட்சி பொறுப்பை நாம் இழந்து இருந்தாலும் எதிர்க்கட்சி என்ற நிலையில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறோம்.
முற்றுப்புள்ளி
இப்போது ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில் தான். நமது கூட்டணி கட்சிகளின் தயவோடு தான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. நமது கூட்டணி கட்சி தலைவர்கள் சொல்லிவிட்டு போகும் போது நான் சொன்னேன், 'செல்லுங்கள் உங்களுடைய விருப்பம், ஜனநாயகத்தை நான் தடுக்க மாட்டேன்.
நாட்டில் ஜனாதிபதி ஆட்சி வந்து விடக்கூடாது; அதன் அடிப்படையில் பாஜ வந்துவிடக்கூடாது' என்பதற்கு தான், வழியனுப்பி வைத்தேன். நமது தயவோடு நடைபெறும் இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க நாம் உறுதியேற்று பணியாற்றுவோம்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
சிறப்பு வீடியோ!
கூட்டணி கட்சிகளை வழியனுப்பி வைத்தேன்: ஸ்டாலின் பரபரப்பு பேச்சு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
யோவ் கருணாநிதி ஸ்டாலின் நீங்க இப்படியே பேசிகிட்டே திரி கட்சி மொத்தமும் பல ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் ஊழல் என ஊழல் பெருச்சாளிகள் ரவுடியிசம் பல்லு போன பகுடு போன பாடையில் போகும் வயதில் இருக்கும் போதும் அமைச்சராகவும் முதல்வராகவும் மட்டுமே இருப்பேன் என்று பதவியில் ஊழல் செய்து சுகம் காணும் கைத்தடி பெருசுகள் பொய்யான மிதமிஞ்சிய தேர்தல் வாக்குறுதிகள் ஊழல் பெருச்சாளிகள் அமைச்சர்களின் வாரிசு அரசியல் கட்டப் பஞ்சாயத்து ரவிடியிசம் அமைச்சர்களின் துர்நாற்றம் வீசும் பேச்சு கட்சியை தன் குடும்ப சொத்தாக மாற்றிக் கொண்டது ஊழல் செய்து திருடி தின்ற பணத்தில் மக்களுக்கு தேர்தல் நேரத்தில் பிச்சை போடுவது என இப்படியே இருங்கடா மக்களுக்கும் இதுதான் வேண்டும் போயி கொடைக்கானல்ல சைக்கிள் ஓட்டி பொழச்சுக்கோ
உங்களுக்கு போட்ட ஓட்டுக்களும் மக்கள் போட்டதுதானே, அப்படின்னா மக்கள் தயவில் ஆட்சி நடக்குதுன்னுதானே சொல்லிருக்கணும். என்ன திமிரு இன்னும் உங்களுக்கு. மக்களை கொஞ்சம்கூட மதிப்பதே இல்லை. திராவிட கட்சிக்காரங்க எல்லோரும் இப்படியே பேசிக்கிட்டுஇருங்க வருகிற இடைத்தேர்தலில் மக்கள் மிச்சமீதி இருக்கிறதயும் உருவிகிட்டு நடுரோட்டுள்ள விடப்போறாங்க.
எதற்கெடுத்தாலும் பாஜகவை கூறாவிட்டால் உங்களால் அரசியல் நடத்த முடியாது அல்லவா?
தோற்றுப்போயும் புத்தி வரவில்லையே
பாவம், இவர் விட்ட ரீல்ஸை தோகுதி மக்களே நம்பள . . அதன் மனஉளைச்சல் காரணத்தால் கண்ணாடி பார்த்து புலம்புவது ரெகுலர் வேத்துக்கொண்டு இருக்கிறார் . இது 5 ஆண்டு காலத்து தொடரும்
ஒரு ஓட்டுக்கு 10 ஆயிரம் கொடுத்ததும் தோற்றவர் நீர் , இப்போ நீர் பேசுவதற்க்கு ஏந்த தகுதியும் இல்லை .
எல்லோரும்தான் மூட்டையை கட்டிக்கிட்டு கெளம்பிட்டாங்களே. அப்பறம் என்ன நம்ப கூட்டணி கட்சி ? நெசமாகவே படு தோல்விக்கு பிறகு இவருக்கு என்னவோ ஆகிவிட்டது.
Best joke: This govt is run by out support to avoid presidential rule and he wanted to place FULL STOP to this govt. HA, HA
எவ்வளவு அடிச்சாலும் இவரு தாங்குறாரு. இவரு ரொம்ப நல்லவரு.
அடுத்த முதல்வர் தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை தான் . தொடர்ந்து துவண்டு திருட்டு கழகம் ஒழிந்துவிடும்மேலும்
-
தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் அமைச்சர் ராஜிவ் உறுதி
-
கணவர் கொலை காதலன் கைது
-
லாரி மீது பஸ் மோதி விபத்து ஆம்னி பஸ் டிரைவர் பலி
-
பா.ஜ., மாநில துணைத் தலைவர் அண்ணாமலை இயக்கத்தில் ஐக்கியம்
-
ஏ.டி.எம்.,மில் தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த அலுவலர்
-
கிராமங்களில் வளர்ச்சி பணிகள் முடக்கம்உள்ளாட்சி தேர்தல் நடத்த வலியுறுத்தல்