திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம்; பழைய நடைமுறையே தொரும் என்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்

67

நமது நிருபர்



திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் 2 ஆண்டுக்கு முன் பின்பற்றப்பட்ட நடைமுறையே தொடரும்; மாற்றப்படாது என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.


மதுரையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறிதாயவது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ரொம்ப தெளிவாக சொல்லியாச்சு, மக்கள் வந்து அமைதியை விரும்புகிறார்கள். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் 2 ஆண்டுக்கு முன் பின்பற்றப்பட்ட நடைமுறையே தொடரும்; மாற்றப்படாது.

இதனை மக்கள் விரும்புகிறார்கள். இதுதான் அரசின் கொள்கையும், இதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. இதில் யாரும் எந்த மதவாத சக்தியும் உள்ளே வந்து அரசியல் செய்ய 100 சதவீதம் நாங்கள் அனுமதிக்கமாட்டோம். இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.
செய்தியாளர்களை சந்தித்துதான்...

முதல்வர் ஏன் செய்தியாளர்களை சந்திப்பதில்லை என்ற கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: செய்தியாளர்கள் யாரையும் பார்த்து பயப்படவில்லை; திமுகவை பார்த்து கூட முதல்வர் ஒரு நிமிடம் கூட பயப்படவில்லை; இது எல்லாம் யாருக்கும் பெரிய விஷயமே கிடையாது. செய்தியாளர்களை சந்தித்தே ஆக வேண்டும் என்று Benchmark Fix பண்ணாதீங்க.

7, 8 ஆண்டுகளாக சிலர் அவர்களது சொந்த விளம்பரத்திற்காக அவர்களுடைய இருப்பைக் காட்டிக்கொள்வதற்காக தினமும் செய்தியாளர்களைச் சந்தித்து வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தது? பிரிண்ட் மீடியாதான் இருந்தது. அறிக்கை மட்டும் வழங்கப்படும். செய்தியாளர்களை சந்தித்துதான் அரசு நடத்த வேண்டும் என்றெல்லாம் இல்லை.

எப்போது தேவையோ அப்போது முதல்வர் விஜய் செய்தியாளர்களை சந்திப்பார்.தொடர்ச்சியாக மக்களை சந்திக்கிறார். மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார். மக்களுக்குத் தேவையானதை அவர் தெளிவுபடுத்துவார். அரசு சார்பாக, கட்சி சார்பாக நாங்கள் செய்தியாளர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

திருப்பரங்குன்றம் தீபம்: விஜய் அரசு நிலைப்பாடு இதான்; அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர் சந்திப்பு தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement