அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் 

கடலுார்: ரெட்டிச்சாவடி சிவனார்புரம் அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. 

கடலுார், ரெட்டிச்சாவடி சிவனார்புரம் அங்காள பரமேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4ம் தேதி விநாயகர் பூஜை, நவக்கிரக பூஜை நடந்தது. கடந்த 5ம் தேதி முதல் கால யாக சாலை பூஜை நடந்தது. நேற்று இரண்டாம் கால யாக சாலை பூஜை, மூன்றாம் கால யாக சாலை பூஜை நடந்தது. இன்று (7ம் தேதி) காலை 7:30 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. 

Advertisement