மாணவர்களுக்கு பாராட்டு 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாவட்ட தமிழ் வழிக்கல்வி இயக்கம் சார்பில் அரசு பொது தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு கூட்டம் நடந்தது.

கச்சேரி சாலை, அம்பேத்கர் சிலை அருகே நடந்த கூட்டத்திற்கு தமிழ் வழி கல்வி இயக்க மாவட்ட தலைவர் சின்னப்ப தமிழர் தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் மதிவாணன், ஜெயப்பிரகாஷ், தமிழன்பு, சவுந்திரராஜன் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற டி.இ.ஓ., சிலம்பூர்க்கிழான், ஆசிரியர் ராமர் வாழ்த்தி பேசினர்.

நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழியில் பயின்று 10, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் புகழேந்தி கேடயம் வழங்கினார். ஆசிரியர் முருகன் சான்றிதழ் வழங்கினார். சமூக நல ஆர்வலர் அம்பேத்கர் புத்தங்கள் வழங்கி வாழ்த்தினார். தமிழ் வழி கல்வி இயக்க நிர்வாகி ராதா நன்றி கூறினார்.

Advertisement