சாலை விபத்தில் ஒருவர் பலி
மந்தாரக்குப்பம்: குறிஞ்சிப்பாடி சுப்புராயர் நகரைச் சேர்ந்தவர் சேகர்,56. இவர் நேற்று காலை இருப்புகுறிச்சியில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். விருத்தாசலம்-கடலுார் சாலை மந்தாரக்குப்பம் நான்குரோடு பகுதியில் சென்று கொண்டிருந்த போது தேசிய நெடுஞ்சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டார்.
விபத்து குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement