ஆட்டோமொபைல் முதல் ஏரோ ஸ்பேஸ் வரை! இன்டெக் தொழில் கண்காட்சியில் அருமை

கோவை: கொடிசியா அரங்கத்தில் இன்டெக் தொழில் கண்காட்சி நடைபெறுகிறது. அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நவீனம், காண்போரை பிரமிக்கச் செய்கின்றன.

கண்காட்சியில் அரங்கு அமைத்துள்ள ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யமாஸகி மஸாக் நிறுவனத்தின் சென்னை மேலாளர் உதயசங்கர் கூறியதாவது:

வி.எம்.சி (Vertical Machining Center) இயந்திரம் உட்பட 380க்கும் மேற்பட்ட இயந்திரங்களை உற்பத்தி செய்கிறோம்.

எங்களின் இன்டக்ரெக்ஸ் (Integrex) என்கிற மல்டி டாஸ்கிங் இயந்திரம் பிரபலம். டேர்னிங் தொழில்நுட்பம் சிறப்பாக இருக்கும்.

ஆயில், காஸ், பம்ப் மோட்டார் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுக்கும் தகுந்த இயந்திரங்களை உற்பத்தி செய்கிறோம். ஏரோ ஸ்பேஸில் கட்டமைப்பு, இன்ஜின் உதிரிபாகங்கள், இயந்திரங்களை வடிவமைக்கிறோம்.

Tamil News

மருத்துவத்துறையில் நீ-கேப் (knee cap) தயாரிக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு இயந்திரங்கள் உள்ளன.

ஏ.ஐ.புரோகிராம் மூலம் ஆட்டோமேடிக் தொழில்நுட்பத்திலும் இயக்க முடியும். லோடிங், அன்லோடிங் எல்லாமே ஆட்டோமேஷன் மூலம் செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


@block_B@

வெப்பம் தடுக்கும் ஃபேன்கள்




சென்னையைச் சேர்ந்த டைபூன் எலக்ட்ரானிக் சொல்யுசன்ஸ் நிறுவனத்தின் மேலாளர் அபராஜித் கூறியதாவது: எலக்ட்ரானிக் இயந்திரங்களில் வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்காக ஃபேன்கள் பொருத்தப்படும். நாங்கள் தைவான் நாட்டு நிறுவனத்துடன் இணைந்து 'ஐ.பி ஃபேன்கள்' (Ingress Protection) தயாரிக்கிறோம். பொதுவாக கட்டுமானம், வேளாண்மை தொடர்பான இயந்திரங்கள், மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்கள் வெளிப்புறத்தில் தான் இருக்கும். சாதாரண ஃபேன்கள் வெளிப்புறத்தில் இயங்கும்போது விரைவாக பழுதாகிவிடும். நாளடைவில் இயந்திரமும் பழுதாகிவிடும். ஐ.பி ஃபேன்கள் தூசி, தண்ணீர் பட்டாலும் பழுதாகாமல் இயங்கும். 10.மி.மீ. தொடங்கி 280 மி.மீ. வரை தேவைக்கேற்ப ஃபேன்கள் உள்ளன. தற்போது இந்தியாவில் ஆங்காங்கே பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.



ஏ.ஐ.கேமராவுடன் ரோபோ



ஜனடிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வடிவமைப்பாளர் மலவரன் கூறியதாவது: தைவான் நாட்டில் உற்பத்தியாகும் 'டெக்மேன் கோபோட்' என்கிற ரோபோவை இந்தியாவில் டிஸ்ட்ரிபியூட் செய்கிறோம். பொருட்களை 'லோடிங்', 'அன்லோடிங்' செய்வதற்கு இதை பயன்படுத்தலாம். ஆட்டோமொபைல், பேக்கேஜிங், 'ஸ்க்ரூயிங்' உள்ளிட்ட பல்வேறு பயன்பாடு உள்ளன. சி.என்.சி இயந்திரத்தில் 3 பேர் செய்யும் பணியை இந்த ஒரு ரோபோ செய்துவிடும். இதில் ஏ.ஐ. கேமராவும் இருக்கிறது. கேமரா பொருத்தி தான் இந்த ரோபோ வருகிறது. காரில் ரிவர்ஸ் கேமரா சோதனை உள்ளிட்டவற்றுக்கும் பயனாகிறது. உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் அனைவரும் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார். block_B

Advertisement