கனரா வங்கிக்கு ரூ.41.80 லட்சம் அபராதம்
கனரா வங்கியின் நிதிநிலை மற்றும் செயல்பாடுகள் குறித்த ரிசர்வ் வங்கியின் ஆய்வின் போது, வங்கி நிர்வாகம் முக்கிய விதிமுறைகளை மீறியிருப்பது கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து, வங்கிக்கு 41.80 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஆர்.பி.ஐ., உத்தரவிட்டுள்ளது.
குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்களின் கே.ஒய்.சி., விபரங்களை, மத்திய கே.ஒய்.சி., பதிவேட்டில் குறிப்பிட்ட கால வரம்பிற்குள் வங்கி நிர்வாகம் பதிவேற்றம் செய்ய தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், ஒரு வருடத்திற்குள் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்ட சில வங்கி கணக்குகளை, விதிகளை மீறி செயலற்ற கணக்குகள் என வங்கி வகைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement