நாட்டு துப்பாக்கிகளை பதுக்கியவர் 'சரண்'
காரிப்பட்டி:காரிப்பட்டி போலீசார், கடந்த ஜன., 30ல், அருநுாற்றுமலை ஆலடிப்பட்டி யில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சுக்கான்காட்டில் உள்ள கருப்பன், 60, என்பவரது வீடு அருகே, உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி, 30 லிட்டர் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.
அதே பகுதியில் உள்ள ராஜேந்திரன் என்பவரது விவசாய நிலத்திலும், பெரியசாமி என்பவரின் நிலத்திலும், நாட்டு துப்பாக்கிகள் இருந்தன. 3 துப்பாக்கிகள், கள்ளச்சா
ராயத்தை பறிமுதல் செய்த போலீசார், மறுநாள், கருப்பனை கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் ராஜேந்திரன், பெரியசாமி நிலங்களில் துப்பாக்கிகளை பதுக்கி வைத்ததாக, வாழப்பாடி, ஆலடிப்
பட்டியை சேர்ந்த சித்திரன், 45, என்பவர், வருவாய்த்துறையினரிடம் நேற்று சரண் அடைந்தார். இதையடுத்து அவரை, காரிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement