சென்றாய பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலம்

வாழப்பாடி:வாழப்பாடி, அக்ரஹாரத்தில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலில் வைகாசி தேர் திருவிழாவை ஒட்டி, நேற்று முன்தினம் கணபதி பூஜை, கலச பூஜை செய்து தேருக்கு கண் திறப்பு நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாணம், சுவாமி அலங்காரத்துடன் ஊர்வலம், அன்னதானம் நடந்தன.


நேற்று காலை ஊரணி பொங்கல் வைத்தல் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள், வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாய பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், நல்லதம்பி கவுண்டர் தெரு, வைத்திய படையாட்சி தெரு வழியே சென்று மீண்டும் மாலை, 6:30 மணிக்கு கோவிலில் நிலை நிறுத்தப்பட்டது. வழியில் ஏராளமான பக்தர்கள், சுவாமிக்கு அவல், கடலை, வெல்லம் உள்ளிட்டவை மூலம் படையல் வைத்தனர். இன்று சத்தாபரணம், நாளை மஞ்சள் நீராடுதல் நடக்கிறது.

Advertisement