வேன் மீது லாரி மோதி விபத்து இருவர் பலி; 3 பேர் படுகாயம்
பாலக்காடு: மலப்புரம் அருகே, கண்ணூர் கொட்டியூர் கோவிலுக்குத் தரிசனம் செய்யச் சென்ற பக்தர்களின் வாகனம் மீது லாரியுடன் மோதியதில், பாலக்காட்டை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்; மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு, கொல்லங்கோடு பய்யலூர் பகுதியிலிருந்து, 26 பேர் கண்ணுார் கொட்டியூர் கோவிலுக்கு தீர்த்தயாத்திரையாக டிராவல்ஸ் வாகனத்தில் புறப்பட்டனர். மலப்புரம் கொண்டோட்டி பெரியம்பலம் அருகே சென்ற போது, எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில், பாலக்காடு வடவன்னுார் பேயாட்டுப்பரம்பை சேர்ந்த வாகன ஓட்டுநர் ராஜேஷ், 40, கொல்லங்கோடு பய்யலுாரை சேர்ந்த ரமணி, 60, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிப்பர் லாரியில் இருந்த மூன்று பேரும் லேசான காயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
நடிகை சுகன்யா தொடர்ந்த அவதூறு வழக்கு: 10 லட்சம் இழப்பீடு வழங்க சன் டிவிக்கு ஐகோர்ட் உத்தரவு
-
அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ.,க்கள் 25 பேரை தெருவில் முதல்வர் விஜய் நிறுத்தி விட்டார்: அ.ம.மு.க., தினகரன்
-
லோக் பவன் முற்றுகை: வைகோ கைது
-
காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறுக
-
திராவிட மாடலை த.வெ.க., தொடருகிறதா?
-
அதிக மழைப்பொழிவு எங்கே?