என்னை விரும்பி வாசிக்க வைக்கும் தொழிலும், அதன் குழந்தை லாபமும்
பவளவிழா காணும், 'தினமலர்' நாளிதழுக்கு முதலில் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
ஒரு தினசரி பத்திரிகை, 75 ஆண்டுகளாக தொடர்ந்து வெளிவருவது என்பது மிகப்பெரிய சாதனையே. தமிழ் பத்திரிகை என்று மட்டுமல்ல, பொதுவாக உலகிலுள்ள தினசரி பத்திரிகைகள் என்று எடுத்துக் கொண்டாலும், இது மாபெரும் சாதனையே.
பல தலைமுறைகளை தாண்டி, இந்த டிஜிட்டல் யுகத்திலும் மக்களின் பேராதரவை பெற்ற குரலாக, 'தினமலர்' நாளிதழ் திகழ்வதற்கு முக்கிய காரணமாக நான் பார்ப்பது, காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்து கொண்டது மட்டுமின்றி, பல்வேறு தரப்பு மக்களுக்கு தேவையான அம்சங்களை உள்ளடக்கி, அவர்களுக்கு பயனுள்ள வகையில் வெளிவருவதும் தான்.
இன்றைய தலைமுறையினருக்காக உள்ளூர் செய்திகள், தேசிய செய்திகள், உலகச் செய்திகள் போன்றவை வெளிவருவது ஒரு புறம் என்றாலும், மறுபுறம் விளையாட்டு, கல்வி மலர், பட்டம் என சின்னஞ்சிறார்களையும் அடுத்த தலைமுறையினரையும் தயார்படுத்துவதில், தினமலருக்கு நிகர் தினமலரே!
புதிர்கள், தமிழ் பயிற்சி போன்றவை, பள்ளி மாணவர்களுக்கான பக்கங்கள் என்றாலும், அதன் வாசகர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமையே!
எல்லாவற்றையும் விட, நான் அதி தீவிரமாக விரும்பி படிப்பதும் மனதார பாராட்டுவதும், தொழில் பக்கம் மற்றும் அதன் குழந்தையாக சமீபத்தில் பரிணமித்திருக்கும் லாபம் பக்கமும் தான் !
பங்குச்சந்தை, பரஸ்பர நிதித் திட்டங்கள், ஆயுள் காப்பீடு, வரிச் சலுகை, முதலீட்டு திட்டங்கள், ஆலோசனைகள், நடுநிலையான விற்பன்னர்களின் கருத்துக்கள் என, ஒவ்வொரு அங்குலமும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
குறிப்பாக, லாபம் பக்கத்தின் லே- - அவுட் கண்ணை கவர்வதாகவும், சற்று கடினமான விஷயம் என, சாமானிய மக்கள் கருதும் விஷயத்தை, அவர்கள் விரும்பி படிக்கும்படி, 'விஷுவல்- அப்பீல்'லோடு தருவதும் இப்பக்கத்தின் தனிச்சிறப்பு.
ஒரு விஷயத்தை சொல்ல மறந்து விட்டேன்; காலத்திற்கு தக்க தன்னை தகவமைத்துக் கொள்ளும் தினமலர் என்று சொன்னேன் அல்லவா? என் அலுவலகத்தில், 'லாபம்' பகுதிக்காகவே, அச்சிட்ட நாளிதழ் வாங்கினாலும், பல ஆண்டுகளாக அன்றாடம் நான் தினமலரை படிப்பதே, 'ஐ- தினமலர்' செயலி மூலமாகத்தான்.
தொழில், வணிகம், பொருளாதாரம், இறக்குமதி, ஏற்றுமதி, சேமிப்பு, முதலீடு, பங்குச்சந்தை, காப்பீடு ஆகியவற்றுக்காக பக்கங்களை மேலும் அதிகரித்து, இப்பகுதி தனி பத்திரிகையாக வரவேண்டும் என்பது என் ஆசை !
தினமலரின் பயணம் மேலும் வெற்றிகரமாகத் தொடரவும், நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு அதன் அருமையான பணி மென்மேலும் சிறக்கவும், என் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்!
என்றும் அன்புடன்,
வ.நாகப்பன்
நிதி எழுத்தாளர் மற்றும் பொருளாதார விமர்சகர்
****
மேலும்
-
நடிகை சுகன்யா தொடர்ந்த அவதூறு வழக்கு: 10 லட்சம் இழப்பீடு வழங்க சன் டிவிக்கு ஐகோர்ட் உத்தரவு
-
அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ.,க்கள் 25 பேரை தெருவில் முதல்வர் விஜய் நிறுத்தி விட்டார்: அ.ம.மு.க., தினகரன்
-
லோக் பவன் முற்றுகை: வைகோ கைது
-
காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறுக
-
திராவிட மாடலை த.வெ.க., தொடருகிறதா?
-
அதிக மழைப்பொழிவு எங்கே?