சமூக வலைதளத்தில் த.வெ.க., - அ.தி.மு.க., மோதல்
- நமது நிருபர் -
'எத்தனை தேர்தல்கள் வந்தாலும், அ.தி.மு.க., மண்ணை கவ்வுவது நிச்சயம்' என, த.வெ.க., விமர்சித்த நிலையில், 'குதிரை பேர சக்தியை தீர்த்துக் கட்டுவோம்' என அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி பதிலடி கொடுத்துள்ளது.
தேர்தல்களில் அதிமுக மண்ணை கவ்வும் - தவெக
த.வெ.க., தகவல் தொழில்நுட்ப அணி அறிக்கை: சினிமாவில் தோன்றி, புகழ் பெற்றவர் விஜயாம்; இதை, விஜயே தேர்தல் பிரசாரத்தில் கூறி உள்ளார். இது தெரியாமல், சினிமா புகழ் என்று தீர்ந்து போன சக்தி, ஏளனம் பேசுவது ஏன்; எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும், சினிமா வாயிலாக புகழ் பெற்றதை தான், இப்படி சொல்லி ஏளனம் செய்கிறீர்களா? கோட் சூட், போட்டோ ஷூட் என்று நீங்கள் பேசுவது, பணிவான பேச்சா, மிஸ்டர் தீர்ந்துபோன சக்தி.
ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகாத எங்களை பார்த்து, 'முன்பு என்ன செய்தீர்கள்' என கேட்பது, என்ன 'லாஜிக்'? குதிரை பேரம் நடத்த வேண்டிய அவசியமே எங்களுக்கு இல்லை.
தீய சக்தியுடன் நீங்கள் நடத்திய ரகசிய பேரம் தான் உலகமறிந்த பேரம். அதனால் எங்கள் மீது அவதுாறு பரப்புவதை நிறுத்திக்கொள்வது நல்லது.
அ.தி.மு.க.,வின் பொதுச்செயலர் என்ற முறையில், தமிழகம் முழுதும் பேசாமல், ஒரே ஒரு மாவட்ட வெற்றியை மட்டும் சிலாகிப்பதால், அந்த மாவட்டத்துக்கு உள்ளேயே மடங்கி, அடங்கி போனதாகத்தான் அர்த்தம். இந்த லட்சணத்தில், விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்கிறீர்களே.
எத்தனை தேர்தல்கள் வந்தாலும், அத்தனையிலும் நீங்கள் மண்ணை கவ்வப்போவது நிச்சயம். கட்சியை காப்பாற்றவே கதறும் நீங்கள், முதல்வர் விஜய் குறித்து பேசுவதை பார்த்து, சிலுவம்பாளையத்தில் இருக்கும் சிறுபிள்ளை கூட சிரிப்பாய் சிரிக்கிறது.
குதிரை பேர சக்தியை தீர்த்து கட்டுவோம் - அதிமுக
அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணி அறிக்கை: தமிழகத்தின் ஒப்பில்லா தலைவர்களான, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரோடு, விஜய் பெயரை எழுதுவதே வரலாற்று அசிங்கம். அப்பா தயவால், சினிமாவுக்கு வந்து, பதிவிடவே கூச்சப்படும் காட்சிகளில், கூச்சமின்றி நடித்த நடிகர். உங்கள் அப்பா இல்லை என்றால், நீங்கள் யார் விஜய்; ஆனால், அதே அப்பா மீது வழக்கு போட்டவர் தானே நீங்கள்?
இலங்கை தமிழருக்காக நிதி கேட்டு வந்த, இன்றைய அமைச்சர் வன்னி அரசை கொச்சைப்படுத்தி அனுப்பியது தானே, உங்கள் அரசியல் வரலாறு. இலங்கை தமிழர்களுக்காக வெறும் 500 ரூபாயை கொடுத்த கஞ்சர். 'கோட் சூட்' 'போட்டோ ஷூட்' நடத்தினால், சொல்லத்தான் செய்வோம்; 'வாவ்... கியூட்' என, சிலாகிக்க, நாங்கள் ஆச்சரியக்குறிகள் இல்லை.
கரூரில் 41 பேர் பலியானபோது, ஓட்டம் பிடித்த சக்தி, எப்போதும் மக்களுடனே நிற்கும், மக்கள் சக்தியான எங்களை பார்த்து பேசக்கூடாது. 'கீழ் மாடியில் ராஜினாமா, மேல் மாடியில் இணைப்பு விழா' என குதிரை பேரத்துக்காக, தலைமைச் செயலகத்தை, பனையூர் பங்களாவாக மாற்றிய கேவலத்திற்கு சொந்தக்காரர்கள் நீங்கள்.
'உயிரை விட இயக்கம் மேல்' என நிரூபிக்கும் தொண்டர்கள் உள்ள அ.தி.மு.க., குறித்து பேச, எந்த அருகதையும் இல்லை. விபரீத யோகத்தால், ஆட்சிக்கு வந்து, தமிழகத்தை அலங்கோலப்படுத்தும், குதிரை பேர த.வெ.க.,வை தீர்த்து கட்டப்போகும் சக்தி தான் அ.தி.மு.க.,
த.வெ.கவின் நடவடிக்கைகளால் அ.தி.மு.க தான் இன்று கூடுதல் மக்கள் கவனத்தைப் பெற்றிருக்கிறது. விஜய் தனிப் பட்ட முறையில் அ.தி.மு.கவை மட்டும் குறிவைத்து தாக்க எடப்பாடி மட்டுமே காரணமாகத் தெரியவில்லை. அன்று ஜெயலலிதாவுடன் ஒரு திரைப்படம் தொடர்பாக விஜய்க்கு முரண்பாடு ஏற்பட்டு ஜெயலலிதாவிடம் காத்து நிற்கும் சூழல் விஜய்க்கு உருவானது. அதுவே பிரதான காரணமாக இருக்கலாம். இன்றைய அ.தி.மு.க தலைமை தான் இதனை மக்களிடம் தெளிவுபடுத்தி அதனை முன்னெடுக்க வேண்டும்.மேலும்
-
நடிகை சுகன்யா தொடர்ந்த அவதூறு வழக்கு: 10 லட்சம் இழப்பீடு வழங்க சன் டிவிக்கு ஐகோர்ட் உத்தரவு
-
அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ.,க்கள் 25 பேரை தெருவில் முதல்வர் விஜய் நிறுத்தி விட்டார்: அ.ம.மு.க., தினகரன்
-
லோக் பவன் முற்றுகை: வைகோ கைது
-
காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறுக
-
திராவிட மாடலை த.வெ.க., தொடருகிறதா?
-
அதிக மழைப்பொழிவு எங்கே?