வெவ்வேறு சாலை விபத்து வாலிபர் உள்பட 3 பேர் பலி
அரூர்; அரூர் அருகே நடந்த வெவ்வேறு சாலை விபத்-துக்களில், மூன்று பேர் பலியாகினர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ராமியம்பட்டியை சேர்ந்தவர் கபில்தேவ், 24, இவர், நேற்று மாலை, 5:30 மணிக்கு ஹோண்டா ஷைன் பைக்கில் தென்கரைகோட்டைக்கு வந்தார். திருவள்ளுவர் நகர் பாரத் பெட்ரோல் பங்க் அருகே முன்னால் சென்ற காரை, கபில்தேவ் முந்திச்செல்ல முயன்றபோது, எதிரே, 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த, ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பைக் மோதியது. இதில், கபில்தேவ் சம்பவ இடத்தி-லயே பலியானார். தலையில் படுகாயமடைந்த அடையாளம் தெரியாத நபரை அக்கம், பக்கத்தினர் மீட்டு, அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர் உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், சீனிவாசபுரத்தை சேர்ந்-தவர் நந்தகோபால், 37. இவர், சொந்தமாக மாருதி சூசகி டூர்ஸ் காரை வாடகைக்கு ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை, 2:45 மணிக்கு திருப்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு மாருதி சூசகி காரை நந்தகோபால் ஓட்டி வந்துள்ளார். சேலம் - அரூர் சாலையில், புழுதியூர் எச்.பி., பெட்ரோல் பங்க் அருகிலுள்ள சர்வீஸ் சாலையில் காரை நிறுத்தி இறங்கினார். அப்போது அவர் மீது டாடா ஏஸ் வாகனம் மோதியதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலயே பலியானார்.
மேற்கண்ட இரண்டு சம்பவங்கள் குறித்து, கோபிநாதம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
கோழிக்கோட்டில் வேகமாக பரவும் நிபா வைரஸ்; தொற்று அறிகுறிகளுடன் 3 பேருக்கு சிகிச்சை
-
மேகதாது விவகாரத்தில் நியாயமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கும்: அமைச்சர் ஆதவ் நம்பிக்கை
-
காங்கிரஸ் கட்சி முதுகில் குத்தி விடும்; முதல்வர் விஜய் ஏமாந்து விடக்கூடாது: அர்ஜூன் சம்பத்
-
இங்கிருந்து 35... அங்கிருந்து 15 பேர்...: கண்ணுாரில் இருந்து ஜெட்டா சென்று வந்த 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமானம்
-
அரசு பள்ளி மாணவர்கள் 10 பேருக்கு விபத்து காப்பீடு வைப்பு பத்திரம் வழங்கல்
-
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு