தடை செய்த பூச்சிக்கொல்லி விற்றால் கடும் நடவடிக்கை
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில், தனியார் உர விற்பனையாளர்க-ளுக்கான உரக்கட்டுப்பாட்டு சட்டம் குறித்த விழிப்-புணர்வு ஆய்வு கூட்டம் நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் மற்றும் தர கட்டுப்பாடு அலுவலர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். தனியார் உர விற்பனையாளர் சங்க தலைவர் பார்த்திபன், செயலாளர் அண்ணாதுரை முன்னிலை வகித்-தனர்.
கூட்டத்தில், வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ்குமார் பேசியதாவது: விற்பனை முனைய கருவி மூலம் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். எந்த ரசாயன உரங்களையும் கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது. உர உரிமம் இல்-லாமல் அல்லது புதுப்பிக்காமல், உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே உரங்களை வினியோகம் செய்ய வேண்டும். விவசாயம் அல்-லாத பயன்பாட்டிற்கு உரங்கள் விற்பது கண்டறி-யப்பட்டால், கடையின் உரிமம் ரத்து செய்யப்-படும். அதிகப்படியான யூரியா பயன்படுத்துவதை குறைத்து, காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்த, விவசாயிகள் முன்வர வலியுறுத்த வேண்டும். யூரியா அதிகளவில் கொடுக்கும் போது, விவசா-யியின் முகவரியுடன் பில் போட்டு கொடுக்க வேண்டும். உரக்கடையில், உரம் இருப்பு குறித்து, தகவல் பலகையை தினமும் பராமரிக்க வேண்டும்.
அனுமதி பெற்ற இடங்களில் மட்டுமே, உரங்களை இருப்பு வைக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––– பெண்கள் தயாரித்த பொருட்களுக்கு முன்னுரிமை! ––––––––
-
காரைக்குடி டீக்கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு
-
திமுக ஆட்சியில் அவசரகதியில் போடப்பட்ட ரூ.2,100 கோடி ஈசிஆர் மேம்பாலத் திட்டம்; கைவிட தமிழக அரசு முடிவு
-
யூடியூபர் மாரிதாஸ் கைது
-
சிங்கப்பெண் அதிரடிப்படையை நாளை துவங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்
-
தங்கம் விலை இன்றும் ரூ.1,040 குறைவு; கடந்த 3 நாட்களில் 3,280 சரிவு