குன்றத்தில் பஞ்சாமிர்தம் விற்பனையை கோயில் நிர்வாகமே நடத்த அரசு உத்தரவு
ிருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசாதங்களைத் தொடர்ந்து பஞ்சாமிர்த விற்பனையையும் கோயில் நிர்வாகமே நடத்த தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதால் இந்தாண்டு பஞ்சாமிர்தம் விற்பனை ஏலம் ரத்து செய்யப்பட்டது.
இககோயிலில் 2026 ஜூலை 1முதல் 2026 ஜூன் 30 வரை பல்வகை சில்லரை குத்தகை உரிமத்திற்கான டெண்டர் திறப்பு துணை கமிஷனர் ஞானசேகரன், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உதவி கமிஷனர் இளங்கோ முன்னிலையில் நடந்தது. 35க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முடிகாணிக்கை மண்டபத்தில் முடிசேகரிக்கும் உரிமம் ரூ. 5.68 லட்சம், காதுகுத்தும் உரிமம் ரூ. 65 ஆயிரம், உயிர் பிராணிகளை சேகரித்துக் கொள்ளும் உரிமம் ரூ. 3.51 லட்சம், சரவணப் பொய்கையில் பரிகாரம், பால்குடம் காவடி செலுத்த வரும் பக்தர்களிடம் வசூல் உரிமம் ரூ. 1.28 லட்சம், மலைக்கு பின்புறம் பால் சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் தேங்காய்பழம், பூஜைப்பொருட்கள் கடை நடத்தும் உரிமம்
ரூ. 2 லட்சத்து 40 ஆயிரத்து 500, கேப்டீரியா கேன்டீன் நடத்தும் உரிமம் ரூ.17 லட்சம்.
கிரிவீதியிலுள்ள புளி, பனை மரங்களின் பலன் அனுபவிக்கும் உரிமம் ரூ. 14 ஆயிரத்து 800, சரவணப் பொய்கை வாகன நிறுத்துமிடம் கட்டண வசூல் உரிமம் ரூ. 27 லட்சத்து 10 ஆயிரம், தெப்பக்குளம் கரை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டணம் வசூல் உரிமம்
ரூ. 10 லட்சத்து 5 ஆயிரத்திற்கு ஏலம் போனது.
கடந்தாண்டு வரை பஞ்சாமிர்தம் விற்பனை ஏலம் விடப்பட்டது. கடந்தாண்டு ரூ. 31.14 லட்சத்திற்கு பஞ்சாமிர்தம், விபூதி விற்பனை ஏலம் போனது. இந்தாண்டு புதிதாக பொறுப்பேற்ற த.வெ.க., அரசு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்பட ஏராளமான கோயில்களில் பஞ்சாமிர்தம் விற்பனையை கோயில் நிர்வாகமே ஏற்று நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பரங்குன்றம் கோயிலில் இந்தாண்டு பஞ்சாமிர்தம் விற்பனை ஏலம் ரத்து செய்யப்பட்டது.
2013 முதல் புளியோதரை, சக்கரை பொங்கல், லட்டு, முறுக்கு, வடை, அப்பம் பிரசாதங்களை கோயில் நிர்வாகமே விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ா
ா
மேலும்
-
சொல்கிறார்கள் –––––––– பெண்கள் தயாரித்த பொருட்களுக்கு முன்னுரிமை! ––––––––
-
காரைக்குடி டீக்கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு
-
திமுக ஆட்சியில் அவசரகதியில் போடப்பட்ட ரூ.2,100 கோடி ஈசிஆர் மேம்பாலத் திட்டம்; கைவிட தமிழக அரசு முடிவு
-
யூடியூபர் மாரிதாஸ் கைது
-
சிங்கப்பெண் அதிரடிப்படையை நாளை துவங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்
-
தங்கம் விலை இன்றும் ரூ.1,040 குறைவு; கடந்த 3 நாட்களில் 3,280 சரிவு