நடிகை சுகன்யா தொடர்ந்த அவதூறு வழக்கு: 10 லட்சம் இழப்பீடு வழங்க சன் டிவிக்கு ஐகோர்ட் உத்தரவு
நமது சிறப்பு நிருபர்
நடிகை சுகன்யா தொடர்ந்த அவதூறு வழக்கில் சன் டிவி ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1996ம் ஆண்டு நக்கீரன் கோபால், சந்தன கடத்தல் வீரப்பனைச் சந்தித்து எடுத்த பேட்டி எடுத்தார். அந்த பேட்டி சன் டிவியில் ஒளிபரப்பானது. அதில், நடிகை சுகன்யா குறித்து அவதூறான கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி, 1996ல் நடிகை சுகன்யா, சன் டிவி மற்றும் நக்கீரன் கோபால் மீது இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தார்.
2015ல் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தின் விசாரணையின் போது, சன் டிவி நெட்வொர்க், யாரையும் அவதூறு செய்யும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று வாதிட்டது. வீரப்பனுடன் தான் நடத்திய நேர்காணலை ஒளிபரப்புவதற்காக, பத்திரிகையாளர் நக்கீரன் கோபால்தான் தங்களை அணுகியதாக அந்த சேனல் கூறியது.
அதற்கு நக்கீரன் கோபால், ''ஒளிபரப்பு ஒப்பந்தத்தின்படி, நேர்காணலின் எந்தப் பகுதியையும் திருத்தி அமைக்கும் உரிமை சன் டிவிக்கு உண்டு. நான் அந்த தொலைக்காட்சிக்கு 9 மணி நேர வீடியோவை கொடுத்தேன். அதில் நான்கு மணி நேர வீடியோ மட்டுமே ஒளிபரப்பப்பட்டது'' என விளக்கம் அளித்தார். விசாரணை முடிவில், சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம், நடிகைக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியது.
ஒளிபரப்புக்கு முன்பாக தவறான தகவல்களைத் திருத்தவோ, நீக்கவோ முழுஉரிமையும் சேனலுக்கு இருந்தும் அவர்கள் அதைச் செய்யத் தவறியதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
மேலும் நடிகை சுகன்யாவுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்குமாறும் சன் டிவிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சன் டிவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு, மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தார்.
ஒளிபரப்புக்கு முன் அந்த அவதூறான பகுதியை எடிட் செய்து நீக்கும் அதிகாரம் சன் டிவிக்கு இருந்தும், அதைச் சரிபார்க்காமல் வெளியிட்டது தவறு என்று கூறிய நீதிபதி, சுகன்யாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
@block_P@
வருத்தம் தெரிவித்து அறிவிப்பு சன் டிவியில் வெளியிடாமல் இன்னொரு பத்திரிகையில் வெளியாகி உள்ளது குறித்து எந்த விளக்கமும் அளிக்காதது ஏன் என்பது பற்றியும் நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், அத்தகைய வருத்தம் அந்த சேனல் ஒளிபரப்பில் வெளியிடப்பட்டிருந்தால், அது முன்னர் வெளியிட்ட செய்தியைப் பார்த்த அதே பார்வையாளரையே சென்றடைந்திருக்கும். இன்னொரு பத்திரிகையில் வருத்தம் தெரிவித்து இருப்பது உள்நோக்கத்தைக் காட்டுகிறது,” என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.block_P
2015 ல் தொடர்ந்த வழக்கு. இது பிசாத்து காசு. 30 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். சுகன்யா பாவம், மார்க்கெட் இல்லாத சினிமா நடிகை. பத்து லட்சம் அபராதம்தான் என்றால் கனிமொழி, காவ்யா போன்றார்கள் இது போன்ற அவதூறு வழக்கு தொடர்ந்தால் கோர்ட் இதே அபராதம்தான் விதிக்குமா ?
ப்ரதர்ஸுக்கு 10 லட்சம் பிஸாத்து பணம் தேர்தல் நேரத்தில் ஓட்டுக்காக பிச்சைக்காரானுக்கு கூடஇந்த பணத்தை தூக்கி வீசு வார்கள்
சன் டிவி மற்றும் நக்கீரன் பத்திரிகை நடத்த அனுமதி கொடுத்த அரசு அமைப்பு முதலில் புகாரை விசாரிக்க வேண்டும். நிர்வாக விசாரணை 3 முதல் 6 மாதத்தில் முடிந்து விடும். அதிகாரிகள் உத்தரவில் குறைபாடு இருந்தால் நீதிமன்றம் அணுக வேண்டும். நீதிபதிகள், நீதிமன்ற நடவடிக்கையை கேள்வி கேட்க அமைப்பு இல்லை என்பதற்கு தீர்வு காண அதிக காலம் எடுப்பது மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்தும். சுகன்யாவிற்கு இழப்பீடு பயன் தராது. நக்கீரன், சன் டிவி சில காலம் தடை செய்ய வேண்டும். நக்கீரனுக்கு சைதை நீதிமன்றத்தில் ஜாமின் கொடுத்து காப்பாற்றியது மூத்த பத்திரிகை ஆசிரியர். தற்போது ஒரு தண்டனையும் இல்லை?
கேவலமான நீதி பரிபாலனம்
காலாவதியான இந்திய தண்டனை சட்டத்தின் லட்சணம்தான் இது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நீதிகிடைப்பது கானல் நீர்தான்.
எங்க ஊரு நாட்டாமை இந்த கேஸ் ஐ சகல விதத்திலும் விசாரித்து ஒரே வாரத்தில் தீர்ப்பு வழங்கியிருப்பார் .
அதென்ன ஆட்சி மாறிய ஒரே மாதத்தில் 30 ஆண்டு கால தீர்ப்பு? கேவலம்
வீட்டு நாய்க்கு மாத சாப்பாடு செலவு.
இன்னும் ஒரு 10 ஆண்டுகள் இழுக்கும்
அவர்களுக்கு பத்துலட்சம் ஒரு தூசுக்கு சமம். குறைந்த பட்சம் பத்து கோடி இழப்பீடு, கூடவா அந்த சேனலை ஒரு வருடத்திற்கு தடை செய்து உத்தரவிட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.மேலும்
-
சரக்குவேன் மோதி தொழிலாளி காயம்
-
தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி ஒண்டி முனியப்பன் நகர் மக்கள் மனு
-
அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் இணையத்தில் விண்ணப்பிக்க அழைப்பு
-
செவிலியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
-
யாத்திரை சென்றவர் மாயம்: மகள் புகார்
-
ராசிபுரத்தில் மாற்றியமைக்கப்பட்ட பஸ் வழித்தடத்தில் எஸ்.பி., ஆய்வு