லோக் பவன் முற்றுகை: வைகோ கைது
சென்னை: சென்னையில் லோக் பவனை முற்றுகையிட முயன்ற ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கைது செய்யப்பட்டார்.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான லோக் பவனில், கடந்த மே 30ம் தேதி, திருவள்ளுவர் திருநாள் கழகம் சார்பில், திருவள்ளுவர் திருநாள் விழா கொண்டாடப்பட்டது.
அப்போது, திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பது போல சித்தரிக்கப்பட்ட படத்திற்கு, கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் மலர் துாவி மரியாதை செய்தார்.
இதையடுத்து, திருவள்ளுவருக்கு மத சாயம் பூச கவர்னர் முயல்கிறார் என, தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், கவர்னரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ம.தி.மு.க., சார்பில் நேற்று லோக் பவன் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
அதில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தலைமையில், ௧௦௦க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
சில நாட்கள் காணாமல் போயிருந்த சொறி...... மறுபடியும் முச்சந்தியில் நின்று ஊளை. இதை கல்லெடுத்து துரத்தி அடிக்கணும்.
இந்த கொளுத்துற வெயில்ல வயசான காலத்துல உங்களுக்கு இது தேவையா. திருவள்ளுவர் இறை பக்தி உள்ளவர் எனவே அவருக்கு காவி உடை பொருத்தம் தான். வள்ளலார் நெற்றியில் விபூதி இல்லாமல் நீங்கள் படம் வெளியிடவில்லையா அவர் ஒரு ஆன்மீகவாதி என்று தெரியாதா
உண்மையான பகுத்தறிவு உள்ளவன் இதையெல்லாம் பெரிதுபடுத்த மாட்டான்.
காவி ஒரு நிறம். அது ஒரு ஆரஞ்சு நிறம் போல கிட்டத்தட்ட . காவி புடிக்கலைன்னு ஆரஞ்சு பழம் சாப்பிடாமலா இருக்க போற. ஆளுநருக்கு காவி புடிச்சிருக்கு அதநால் காவி. உன் வீட்டில திருவள்ளுவர் சிலைக்கு கருப்பு போடு உனக்கு அது புடிச்சிருக்குன்னா. பச்சை புடிக்கவங்க பச்சை. கருப்பு சிவப்பு புடிசிச்சவங்க அதை போடுங்க. திருவவள்ளுவர் காலத்தில துணியே கிடையாது. அதனால் அவர் மேலே துணியே இருக்க கூடாதுன்னு சொன்னாலும் சொல்வீக போலிருக்கு. மழித்தலும் நீட்டலும் வேண்டா என்றார் வள்ளுவர். நீட்டல் முடியும் நீட்டல் முடியும் உள்ள வள்ளுவரை தானே வடிவமாக பார்க்கிறோம்.
திருவள்ளுவர் மக்கள் நன்மைக்காக பாடினார். நீ என்னவென்றால் அவர் மேலே இருக்கும் காவி துணி என் கண்ணை உறுத்துகிறது என்கிறாய். வாழும் கொஞ்ச காலமாவது மக்களுக்காக சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு நல்ல பேர் சம்பாதிக்கலாம். திருவள்ளுவர் எதை உடுத்தினார் எதை உண்டார் என்ற்று எவன்யா கண்டான்?
வைகோ மற்றும் அவர் கும்பலை கவர்னர் பங்களா உள்ளே அழைத்து சென்று டீ, பஜ்ஜி, போண்டா கொடுத்து பசி ஆற்றியதற்கு நன்றி. குறிப்பாக பஜ்ஜி நன்றாக இருந்ததென்று சாப்பிட்டவர்கள் சொன்னார்கள். வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.மேலும்
-
சரக்குவேன் மோதி தொழிலாளி காயம்
-
தடையின்றி குடிநீர் வழங்கக்கோரி ஒண்டி முனியப்பன் நகர் மக்கள் மனு
-
அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் இணையத்தில் விண்ணப்பிக்க அழைப்பு
-
செவிலியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
-
யாத்திரை சென்றவர் மாயம்: மகள் புகார்
-
ராசிபுரத்தில் மாற்றியமைக்கப்பட்ட பஸ் வழித்தடத்தில் எஸ்.பி., ஆய்வு