மழை முன்னெச்சரிக்கை: நடவடிக்கைகள் தீவிரம்
பொள்ளாச்சி: தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், நெடுஞ்சாலைத்துறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி உட்கோட்டத்தில், பருவ கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள், சவுக்கு கம்புகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், இரும்பு தடுப்புகள், ஜே.சி.பி., இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி - தாராபுரம் - கரூர் ரோட்டில் உள்ள பெரியாக்கவுண்டனுாரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொள்ளாச்சி நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் நித்தியானந்தன் ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு உரிய அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது, உதவி கோட்ட பொறியாளர் அருணகிரி, உட்கோட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அதியமான் நகர் சாலை சந்திப்பில் கொட்டும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
-
டாஸ்மாக் கடையை மூடக் கோரி மக்கள் சாலை மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
-
‘டாஸ்மாக்’ கடையை அகற்றக்கோரி கன்னியம்மன் நகரில் போராட்டம்
-
கிண்டிக்கு கட்டண ஸ்டேஜ் இல்லாததால் பயணியர் பாதிப்பு
-
முத்துமாரியம்மன் கோவிலில் தேரோட்டம் குறித்து ஆலோசனை
-
தலைமை ஆசிரியர்கள் சங்க முப்பெரும் விழா
Advertisement
Advertisement