புகையிலை கடத்தல்: இருவர் கைது

கோத்தகிரி:கோத்தகிரியில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த, இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. நீலகிரி எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில், போலீசார் தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, கோத்தகிரி பஜார் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, கன்னிகா தேவி காலனியை சேர்ந்த, பெருமாள், 33, கடைவீதியை சேர்ந்த விசாகு, 33 ஆகியோர் புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக கடத்தியது உறுதி செய்யப்பட்டது.

காரில் வைத்திருந்த, 7 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.

Advertisement