‘வாங்க கற்றுக்கொள்வோம்’ மக்களுக்கு சிறப்பு பயிற்சி 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில், ‘வாங்க கற்றுக்கொள்வோம்’ என்ற தலைப்பில், மக்களுக்கு சிறப்பு பயிற்சி, தீயணைப்புத்துறை நிலையத்தில் நடந்தது. தீயணைப்பு துறை நிலை அலுவலர் கணபதி தலைமை வகித்தார்.

பொதுமக்களிடம், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தீயின் வகைகள், தீயணைப்பான் வகைகள், தீயணைப்பான் பயன்படுத்தும் முறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

மேலும், சமையல் காஸ் தீ பாதுகாப்பு, காஸ் கசிவை தடுக்கும் முறைகள், வாகன தீ விபத்து காரணங்கள், வாகன தீ விபத்தின் போது கடைபிடிக்க வேண்டியது குறித்து விளக்கப்பட்டது.

மேலும், மின்கம்பி இணைப்புகள், மின்சாதானங்கள் முறையாக பராமரிக்க வேண்டும், மின்சார பிளக் பாயின்ட்களில் அதிக சுமை ஏற்படுமாறு பல சாதனங்களை இணைக்கக்கூடாது. பயன்பாட்டுக்குப்பிறகு மின் சாதனங்களை அணைக்க வேண்டும்.

சேதமடைந்த மின்கம்பிகள், தளர்ந்த பிளக் பாயின்ட்கள், உடைந்த சுவிட்சுகள் உடனடியாக மாற்றியமைக்க வேண்டும், என, தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களிடம் தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

Advertisement