பா.ஜ., ஆலோசனை கூட்டம்
மஞ்சூர்:மஞ்சூர் பா.ஜ., அலுவலகத்தின் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
மஞ்சூர் பா.ஜ., அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு, குந்தா மண்டல தலைவர் மீனா தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்ட பொது செயலாளர் பாபு, மாவட்ட துணை தலைவர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஊட்டி தொகுதி எம்.எல்.ஏ., போஜராஜன் பங்கேற்று கட்சி முன்னேற்றம் குறித்து பேசினார். தொடர்ந்து, கரியமலை, மஞ்சூர், கீழ்குந்தா, மேல்குந்தா உட்பட பல்வேறு கிராமங்களுக்கு சென்று சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுசூழல் பிரிவு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஊடக பிரிவு மாவட்ட அமைப்பாளர் அஜித், மண்டல பொது செயலாளர் கமல கண்ணன், கிளை தலைவர்கள், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
அதியமான் நகர் சாலை சந்திப்பில் கொட்டும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு
-
டாஸ்மாக் கடையை மூடக் கோரி மக்கள் சாலை மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
-
‘டாஸ்மாக்’ கடையை அகற்றக்கோரி கன்னியம்மன் நகரில் போராட்டம்
-
கிண்டிக்கு கட்டண ஸ்டேஜ் இல்லாததால் பயணியர் பாதிப்பு
-
முத்துமாரியம்மன் கோவிலில் தேரோட்டம் குறித்து ஆலோசனை
-
தலைமை ஆசிரியர்கள் சங்க முப்பெரும் விழா