முத்துமாரியம்மன் கோவிலில் தேரோட்டம் குறித்து ஆலோசனை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மந்தைவெளி முத்துமாரியம்மன் கோவிலில தேரோட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் இவ்வாண்டு தேரோட்டம் நடத்துவது குறித்த நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு கோவில் பரம்பரை தர்மகர்த்தா செல்வம் தலைமை தாங்கினார். கோவில் நிர்வாகிகள் முன்னாள் நகர்மன்ற தலைவர் ரங்கன், அய்யாசாமி, மாதேஸ்வரன், மணி, நுகர்வோர் அமைப்பு மாவட்ட செயலாளர் அருண் கென்னடி முன்னிலை வகித்தனர். கோவில் அர்ச்சகர் திருமலைகேசவன் பட்டர் வரவேற்றார். கூட்டத்தில் வரும் ஜூலை 29ம் தேதி அம்மன் தேரோட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. சங்கர் நன்றி கூறினார்.

Advertisement