தலைமை ஆசிரியர்கள் சங்க முப்பெரும் விழா

கள்ளக்குறிச்சி: தமிழக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பதவி உயர்வு, பணி நிறைவு, பொதுத்தேர்வில்100 சதவீத தேர்ச்சி அளித்த தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. தலைமை ஆசிரியர்கள் சங்க மாவட்ட தலைவர் பாரதியார் தலைமை தாங்கினார்.

மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், மகளிரணி செயலாளர் லதா, அமைப்பு செயலாளர்கள் ஏழுமலை, பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். கல்வி மாவட்ட தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். முன்னாள் மாவட்ட செயலாளர்களான, ஓய்வு பெற்ற டி.இ.ஓ.,க்கள் சுகுமாரன், கோலக்காரன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் டி.இ.ஓ.,க்களாக பதிவு உயர்வு பெற்ற விஷ்ணுமூர்த்தி, செந்தில்குமார் ஆகியோர்களுக்கும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் மணி, செந்தில்குமார், ஞானசேகரன், திலகவதி, ஜெயசுந்தரி, சுப்ரமணியன், 100 சதவீத தேர்ச்சி தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேவேந்திரன், கனிமொழி, காமராஜ் உள்ளிட்டவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள் மோகனரங்கன், மெய்யப்பன், சரஸ்வதி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட செயலாளர் ரவி நன்றி கூறினார்.

 

Advertisement