இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு சலுகை: உஸ்பெகிஸ்தான் அழைப்பு
புதுடில்லி: இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உஸ்பெகிஸ்தான் நாட்டில் முதலீடு செய்தால் சலுகைகளும், ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என, அந்நாட்டின் தொழில் துறை துணை அமைச்சர் சோக்குருக் குலமோவ் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
உஸ்பெகிஸ்தான் 2035ம் ஆண்டுக்குள், மத்திய ஆசிய நாடுகள் மத்தியில் மருந்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கிய மையமாக உருவெடுக்க திட்டமிட்டுள்ளது.
இந்திய மருந்து உற்பத்தி நிறுவனங்கள், மருந்து தயாரிப்பு, ஊட்டச்சத்து, உயிரி தொழில்நுட்பம், மருத்துவ உபகரண தயாரிப்பு ஆகியவற்றில் உலகளாவிய அனுபவத்தை கொண்டுள்ளதால், முதலீடு செய்ய அழைப்பு விடுக்கிறோம்.
மேலும், உஸ்பெகிஸ்தானில் மருந்து உற்பத்தியில் ஈடுபடும் இந்திய நிறுவனங்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலங்களில் 10 ஆண்டுகள் வரி விலக்கு, மானிய விலையில் நிலம், சுங்க வரி சலுகை, உள்கட்டமைப்பு வசதிகள், உடனடி அரசு அனுமதிகள், முதலீடு சார்ந்த ஊக்கத்தொகை.
எளிமையான உரிமம் வழங்கும் நடைமுறை, ஆராய்ச்சி தொடர்பான ஊக்கம், உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கான சலுகைகள் உள்ளிட்டவை வழங்கப்படும். ஏற்றுமதி சார்ந்த மருந்து உற்பத்தியும் ஊக்குவிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அவிங்களும் ஆத்மநிர்பார் ணு கெளம்பிட்டாங்க டோய்..மேலும்
-
நடிகை சுகன்யா தொடர்ந்த அவதூறு வழக்கு: 10 லட்சம் இழப்பீடு வழங்க சன் டிவிக்கு ஐகோர்ட் உத்தரவு
-
அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ.,க்கள் 25 பேரை தெருவில் முதல்வர் விஜய் நிறுத்தி விட்டார்: அ.ம.மு.க., தினகரன்
-
லோக் பவன் முற்றுகை: வைகோ கைது
-
காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறுக
-
திராவிட மாடலை த.வெ.க., தொடருகிறதா?
-
அதிக மழைப்பொழிவு எங்கே?