'வீகன்' உணவு பாக்கெட்டுகள் மீது 2027 ஜூலை 1 முதல் லோகோ கட்டாயம் உணவு பாதுகாப்பு ஆணையம் அறிவிப்பு

புதுடில்லி: அடுத்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் 'வீகன்' உணவு பொருட்களின் பேக்கேஜில் 'வீகன்' லோகோவை கட்டாயம் அச்சிட வேண்டும் என்று எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்து உள்ளது.

இதுகுறித்து அதன் அறிக்கையில் தெரிவித்ததாவது:

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய (வீகன் உணவுகள்) திருத்த விதிமுறைகள் - 2026 வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி அங்கீகாரம் பெற்ற அனைத்து வீகன் உணவு பொருட்களின் பேக்கேஜ்களிலும் 'வீகன்' லோகோ குறிப்பிடுவது 2027 ஜூலை 1ம் தேதி முதல் கட்டாயமாகும்.

இந்த அறிவிப்பின் படி, வீகன் உணவு பொருட்களின் பேக்கேஜ் மீது இலை சின்னத்துடன் கூடிய பச்சை நிற 'வீகன்' லோகோ இடம்பெற செய்ய வேண்டும்.

அதன் அளவு, இடம், நிரந்தர நிலைகள் உள்ளிட்ட விபரங்கள், விரிவான வரைபடங்களுடன் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், அஸ்வகந்தாவின் பயன்பாடு குறித்த அறிவுரையில், அஸ்வகந்தா செடியின் வேர், அதன் சாறுகளை மட்டுமே ஆரோக்கிய உணவு பொருட்கள், ஊட்டச்சத்து பொருட்கள், மருத்துவ உணவுகளில் பயன்படுத்த அனுமதிக்கப் பட்டுள்ளது.

அதன் இலைகளை பச்சையாகவோ, சாறாகவோ வேறு எந்த வடிவிலும் பயன்படுத்த அனுமதி இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

@block_B@

வீகன் உணவு முறை

அசைவம் மட்டுமின்றி, பால், பால் பொருட்களான வெண்ணெய், நெய், சீஸ், யோகர்ட் மற்றும் தேன் போன்றவற்றை சேர்க்காத உணவுகளை மட்டுமே வீகன் என்கிறார்கள். பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பட்டாணி ரகங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள், சோயா, பாதாம், தேங்காயில் இருந்து கிடைக்கும் பால் ஆகியவை வீகன் உணவுகளாக பயன்படுத்தப்படுகின்றன.block_B

Advertisement