விநாயகர் கோவில் பூசாரி மீது புகார்

திரு.வி.க.: விநாயகர் கோவில் பூசாரி மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.

திரு.வி.க., நகர், வெற்றி நகர், வரதராஜன் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன், 66. இவர், அதே பகுதியில் உள்ள, வினைதீர்த்த விநாயகர் கோவிலின் தலைவராக உள்ளார்.

கடந்த மே மாதம் கோவிலில் நடந்த மீனாட்சி திருக்கல்யாணத்திற்காக, கோவிலின் 19.33 கிராம் தங்க நகை மற்றும் 554 கிராம் வெள்ளி பொருட்களை, கோவில் பூசாரி பூர்ணபிரகாஷ் குட்டி என்பவரிடம் கொடுத்துள்ளார்.

கோவில் நிகழ்ச்சிகள் முடிந்தும், நகைகளை திருப்பி தராமல் பூசாரி பூர்ணபிரகாஷ் குட்டி அலைக்கழிப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து, சுந்தர்ராஜன் திரு.வி.க., நகர் போலீசில், நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement