மாநில பேட்மின்டன் போட்டி: சென்னைக்கு வீரர்கள் அசத்தல்

சென்னை: மாநில சீனியர் தரவரிசை பேட்மின்டன் போட்டியில், சென்னை வீரர்கள் ஐந்து பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.

தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம் சார்பில், இரு பாலருக்குமான மாநில ரேங்கிங் பேட்மின்டன் போட்டி, தென்காசியில் நடந்தது.

இதில் சென்னை சார்பில் 'ஹட்சன்' பேட்மின்டன் அகாடமி வீரர் - வீராங்கனையர் போட்டியிட்டனர். 'நாக் -அவுட்' விதிப்படி போட்டிகள் நடந்தன.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், ஹட்சன் அகாடமியின் சச்சின், லெஸ்லீ ராய் ஆகியோர் தகுதி பெற்றனர். போட்டி முடிவில், சச்சின் தங்கப் பதக்கத்தையும், லெஸ்லீ ராய் வெள்ளி பதக்கத்தையும் வென்று அசத்தினர்.

அதேபோல மகளிர் இரட்டையர் பிரிவில், தன்யா வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்ரீமீனாட்சி, ஹஷினி ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினர்.

கலப்பு இரட்டையர் பிரிவில் ரீவா - எவாஞ்சலின் வெள்ளி வென்று அசத்தினர்.

Advertisement