காய்கறிகள் உற்பத்தி குறைவு :விலை எகிறியதால் அதிர்ச்சி

சென்னை: கோடையில் காய்கறிகள் உற்பத்தி குறைந்து, அவற்றின் விலை உயர்ந்து வருவதால், நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோடை வெயில் காரணமாக, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் காய்கறிகள் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, முக்கிய சந்தைகளுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதால், அவற்றின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது.

சென்னை கோயம்பேடு சந்தையில் கேரட், கத்தரிக்காய், பீட்ரூட், சேனைகிழங்கு, முருங்கைக்காய், முள்ளங்கி, புடலங்காய், அவரைக்காய், குடைமிளகாய் உள்ளிட்ட பலவகை காய்கறிகள், கிலோ 50 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றை வாங்கி செல்லும் வெளிசந்தை வியாபாரிகள் வாகன வாடகை, மூட்டை ஏற்றி இறக்கும் கூலி, லாபம் ஆகியவற்றை கணக்கிட்டு கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்து வருகின்றனர்.

காய்கறிகள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காய்கறி விலை உயர்வு காரணமாக, வெயிலில் அவை வேகமாக வதங்குவதாலும், சாலையோரங்களிலும், தள்ளுவண்டிகள், நடமாடும் வாகனங்களிலும், அவற்றை விற்பனை செய்வது குறைந்துள்ளது.

Advertisement