பாதியில் நின்ற பேருந்து பயணியர் கடும் அவதி
செய்யூர், ஜூன் 8-–
மதுராந்தகத்தில் இருந்து செய்யூர் நோக்கி சென்ற அரசு பேருந்து, திடீர் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நின்றதால் பயணியர் அவதிப்பட்டனர்.
மதுராந்தகத்தில் இருந்து செய்யூர் வரை செல்லும் தடம் 6 எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இந்த பேருந்து நேற்று காலை 15 பயணியருடன் மதுராந்தகத்தில் இருந்து செய்யூர் நோக்கி சென்றது. சித்தாமூர் பகுதியில் சென்றபோது திடீரென பேருந்தில் கோளாறு ஏற்பட்டு பாதி வழியில் நின்றது. இதனால், பயணியர் கடும் அவதிப்பட்டனர். அரைமணி நேரத்திற்கு பின் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுராந்தகம் டெப்போவில் இருந்து கிராமபுறங்களுக்கு கண்டமான பேருந்துகளை இயக்குவதால், அடிக்கடி பழுதாகி நிற்கும் நிலை தொடர்கிறது.
எனவே, போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
நடிகை சுகன்யா தொடர்ந்த அவதூறு வழக்கு: 10 லட்சம் இழப்பீடு வழங்க சன் டிவிக்கு ஐகோர்ட் உத்தரவு
-
அ.தி.மு.க., --- எம்.எல்.ஏ.,க்கள் 25 பேரை தெருவில் முதல்வர் விஜய் நிறுத்தி விட்டார்: அ.ம.மு.க., தினகரன்
-
லோக் பவன் முற்றுகை: வைகோ கைது
-
காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறுக
-
திராவிட மாடலை த.வெ.க., தொடருகிறதா?
-
அதிக மழைப்பொழிவு எங்கே?