மணமான பெண்ணுக்கு தொல்லை: வாலிபர் கைது

சென்னை;திருமணமான பெண்ணிற்கு தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ராயப்பேட்டையைச் சேர்ந்த 26 வயது இளம் பெண், கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர், ராயப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், அலுவலக உதவியாளராக பணிபுரிந்தார்.

அப்போது, ராயப்பேட்டை, முத்தையா கார்டன் பகுதியைச் சேர்ந்த நரேஷ், 24 என்பவருடன், நட்பாக பழகி வந்துள்ளார். இதை அவர் தவறாக நினைத்து அப்பெண்ணிற்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால், நரேஷுடனான நட்பை, அப்பெண் துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நரேஷ், அப்பெண்ணுக்கு மனது ரீதியாக தொல்லை கொடுத்ததுடன், தலையில் தாக்கி உள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண், ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார் நரேஷை நேற்று கைது செய்தனர். இவர் மீது வழிப்பறி உட்பட ஆறு வழக்குகள் ஏற்கனவே உள்ளன.

Advertisement